புதன், ஜனவரி 06, 2016

தலைவன் வருகிறான் காத்திருப்போம்

 2016!!  புது ஆண்டு பிறந்து விட்டது.  தமிழனின் பழைய கனவுகள் எல்லாம் அப்படியே புது ஆண்டிலேயும் தொடர்ந்து பயணிக்கின்றன.  2011 இல் கொடுத்த வாக்குறுதிகள்  இப்போதும் சாகா வரம் பெற்று இருகின்றன. தமிழனை செய்வீர்களா? செய்வீர்களா? என்று கேட்ட போது செய்தான்.  மறப்பீர்களா? மறப்பீர்களா? என்ற போது மறந்தான்.  மன்னித்து விடுங்கள் என்ற போது மன்னித்தும் விட்டான்.  அரசியல் வாதிகளே!! நீங்கள் எதை செய்தாலும் பொறுத்துக்கொள்ளும் தமிழன் இனியும் பொறுப்பானா? பொறுப்பான் என்றே தோன்றுகிறது.  பொறுத்து கொள்ளத் தான் வேண்டும். வேறு வழி இருக்கிறதா இந்தியாவில்? 

"யாருக்கு ஓட்டு போட " என்று 10.04.2009 அன்று நான் எழுதிய பதிவு (கீழே) இன்றளவும் பொருந்தும் போலிருக்கிறது. 

இது வரை நாம் தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆட்சியையும், மத்தியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆட்சியையும் பார்த்துக்கொண்டு வருகிறோம். இந்த இரண்டு கட்சிகளுக்குள் எது ஆட்சிக்கு வந்தாலும், எந்த எந்த மாற்றங்கள் வருகின்றன என்று யோசித்து பாருங்களேன். தமிழ்நாட்டை பொறுத்தவரை அ.தி.மு.க ஜெயித்தாலும், தி.மு.க ஜெயித்தாலும், நாட்டின் நிலைமை ஒன்றுதான். சுகாதார தரமோ, அரசாங்க அலுவலகங்களின் செயல்பாடோ, லஞ்சமோ, ஊழலோ, பாதுகாப்போ, வேலைவாய்ப்புகளோ, வாழ்க்கைதரமோ எதிலாவது வேற்றுமை தெரிகிறதா? ஊடகங்களில் தான் தி.மு.கவும் அ.தி.க.வும் எதிரிகள். ஆனால், கொள்கை அளவில், அமைப்புகளில், செயல்பாடுகளில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒரே மாதிரியானவர்கள்.

எனவே, நம் நாட்டை ஆள தகுதி உள்ள ஒரு தலைவன் எங்கே இருக்கிறான் என்பதை கடவுள் சீக்கிரம் காட்டுவாராக! அது வரை நாம் பொறுத்திருப்போம்.  காத்துக்கொண்டு இருப்பதில் நாம் சளைத்தவர்கள் இல்லையே!!!

 




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக