வெள்ளி, ஏப்ரல் 10, 2009

யாருக்கு ஓட்டு போட

இது தேர்தல் நேரம் என்பதால் ஒரு கேள்வி. இதுவரை நாம் தமிழ்நாட்டில்
தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆட்சியையும், மத்தியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆட்சியையும் பார்த்துக்கொண்டு வருகிறோம். இந்த இரண்டு கட்சிகளுக்குள் எது ஆட்சிக்கு வந்தாலும், எந்த எந்த மாற்றங்கள் வருகின்றன என்று யோசித்து பாருங்களேன்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை அ.தி.மு.க ஜெயித்தாலும், தி.மு.க ஜெயித்தாலும், நாட்டின் நிலமை ஒன்றுதான். சுகாதார தரமோ, அரசாங்க அலுவலகங்களின் செயல்பாடோ, லஞ்சமோ, ஊழலோ, பாதுகாப்போ, வேலைவாய்ப்புகளோ, வாழ்க்கைதரமோ எதிலாவது வேற்றுமை தெரிகிறதா? ஊடகங்களில் தான் தி.மு.கவும் அ.தி.க.வும் எதிரிகள். ஆனால், கொள்கை அளவில், அமைப்புகளில், செயல்பாடுகளில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒரே மாதிரியானவர்கள். இரண்டு பேருமே தேவைப்பட்டால் ராமதாஸை சேர்த்துக்கொள்வார்கள். தேவைப்பட்டால் L.T.T.E ஐ ஆதரிப்பார்கள். தேவைப்பட்டால் காங்கிரஸுடன் கூட்டு வைத்துக்கொள்வார்கள்.

இப்படி இருக்கையில், நாம் மாற்றி மாற்றி தி.மு.க வுக்கும், அ.தி.மு.க வுக்கும் ஒட்டு போட்டு ஜெயிக்க வைக்கிறோம். இரண்டு கட்சியுமே ஒரே மாதிரி கட்சி தானே.

நம் ஓட்டுக்கு ஒரு அர்த்தம் இல்லாத போது நாம் என்ன செய்ய??