Rajinikant லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Rajinikant லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, ஜூன் 19, 2016

நெருப்புடா...கபாலி பாடல்

பருப்புடா, தக்காளிடா ...என்று கபாலியின் பாடலையொட்டி காமெடிகள் வந்தாலும் நெருப்புடா பாடல் நிஜமாகவே நெருப்பு ரகம்.    ரஜினி ரசிகன் என்பதால் மட்டும் அல்லாமல் பொதுவாகவே கபாலியின் பாடல்கள் எல்லாமே பிடித்திருந்தது.   ஏனென்றால் கபாலி பாடல்கள் பழைய இசை வடிவங்களை ஒத்திராது புதிதாக இருக்கிறது.  

சிவாஜி, எந்திரன் பட பாடல்கள் ரஹ்மானின் வழக்கமான பாடல்களாக இல்லாமல் வித்தியாசமாக இருந்தன.  இளையராஜா ரஜினிக்கு பாடல்கள் போட்ட போது, படத்துக்கு படம் வித்தியாசமாய் இசையமைத்திருப்பார். அம்சலேகாவின் கொடி பறக்குது கொஞ்சம் Different ஆக இருந்தது.    ஆனால் கபாலி இது வரை வந்த ரஜினி பட பாடல்கள் போல் இல்லாமல் முற்றிலும் புதிதாய் அதே சமயம் powerful ஆகவும், இளைய தலைமுறையை கவரக்கூடிய வகையிலும் உள்ளது.

நெருப்புடா பாடலை கேட்டால்  மேற்கத்திய Heavy Metal வகை இசையை போல் தெரியும்.  இந்த வகையறாவை யொட்டி சில தமிழ் பாடல்கள் வந்திருந்தாலும், இது தான் முழுக்க முழுக்க Heavy Metal யொட்டி வந்த தமிழ் பட பாடல் என்று நினைக்கிறேன். உதாரணத்திற்கு Metallica என்னும் இசைக்குழுவின் இந்த Heavy Metal வகை பாடலை கேளுங்களேன்.


இப்போது நெருப்புடா பாடலை கேளுங்களேன்.


நெருப்புடா ...நிஜமாகவே நெருப்பான பாடல் தான்......



வியாழன், மே 05, 2016

கபாலி டீசர்

Image result for kabali

கபாலி டீசரை பார்த்தவுடன் தலைவர்க்கெல்லாம்  டீசர் தேவையா என்று தோன்றியது.   ஒழுங்காக படத்தின் ட்ரைலர், பாடல் வெளியீடு, பின் பட வெளியீடு என்று போய்க்கொண்டிருந்ததை இப்போது டீசர் 1, டீசர் 2 என்று விளம்பரப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.  

ஒரு நிமிடம் ஓடக்கூடிய டீசரில், பாவம் எடிட்டர் எதிர்பார்ப்புகளை கிளப்பக்கூடிய ஏகப்பட்ட சமாசாரங்களை நுழைக்க வேண்டும்.  டீசர் சரியில்லை என்றால் ஆரம்பமே சரியில்லை என்றாகிவிடும்.  இதில் மற்ற ஹீரோக்களுடனும், படங்களோடும் லைக்சுக்கும், பார்வைக்கும் ஒப்பீடு வேறு!!!  நல்ல வேளை, தலைவர் இதிலும் தான் இன்னும் சூப்பர் ஸ்டார் என்று நிருபித்து விட்டார் (12 மில்லியனுக்கும்  மேல் மக்கள் இந்த டீசரை பார்த்து இருக்கிறார்கள்).

டீசரில் ஒரு இடத்தில் தலைவர் ஒரு வசனம் பேசுகிறார்.  கபாலினா கன்னத்துல மரு வச்சுக்கிட்டு நம்பியார் கூப்பிட்டவுடனே தலைய குனிஞ்சுகிட்டு என்னங்க எஜமானு ஒருத்தன் வருவானே அவன்னு நினைச்சியாடா ?  கபாலிடா!!!  அப்படின்னு சொல்லுவார்.  ஆனால் இந்த வசனத்தில் தலைவரின் Usual வேகம் மிஸ்ஸிங்.  இதை இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம்.  எப்படி இருந்தாலும் தலைவர் படமாச்சே, பார்த்தே தீருவோம் என்ற கட்சியை சேர்ந்தவர்கள் நிறைய பேர் இருப்பதால், இதை எல்லாம்  யாரும் கண்டுக்க போறதில்லை. மற்றபடி இந்த டீசரில் என்னால் பெரிதாக ஒன்றையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. கதையையோ, டூயட்டையொ, தலைவரின் வேறு ஸ்டைலையோ எதுவுமே தெரியவில்லை.  

இன்றைய Gadget உலகத்தில் டீசர் போன்றவை  இளம் தலைமுறையினரை தங்கள் நேரத்தை விரயம் செய்யும் விஷயங்களாகவே நான் பார்க்கிறேன். ரசிகர்களின் ஆவலை தூண்டி விடுவதற்கும், முதல் காட்சிகளை அரங்கு நிறைந்த காட்சிகளாக்க வைக்க வேண்டி வெளியிடப்படுபவை தான் இந்த டீசர்கள்.   பிறகு படம் வெளியிடும் நேரத்தில், Promotion என்னும் பேரில் படத்தின் நடிகர்களின் பேட்டியை ஒளிபரப்புவார்கள்.   ஆனால் இது எல்லாம் தலைவருக்கு தேவையில்லையே....

படத்தின் ட்ரைலருக்காகவும், பாடல்களுக்காகவும் I am waiting!!!!

ஞாயிறு, ஜூலை 29, 2007

சிவாஜி படம் அவசியமா?

'சிவாஜி' படத்தை புறக்கணியுங்கள், 'சிவாஜி படம் சமுதாயத்திற்கு சீர்கேடு போன்ற பதிவுகளை பார்த்தாகிவிட்டது. நான் கூட சிவாஜி படத்தை இரண்டு நாள் முன்பு வரை பார்க்காமல் இருந்தேன். காரணம் அலுவலக வேலை சம்பந்தமாக கடந்த மூன்று மாதங்களாய் இந்தோனேஷியாவில் இருக்க நேர்ந்தது தான்.

முதலில் சிவாஜி படத்தின் நிறை குறைகள்:

நிறைகள் - சூப்பர் ஸ்டாரின் Style & நடிப்பு, ஸ்ரேயாவின் அழகு,
விவேக்கின் காமெடி, சுமனின் பாத்திரம், சுஜாதாவின்
வசனம், Camera, டீக்கடை சீன், மொட்டை ரஜினி,
அதிரடி Song, 38 நாட்களுக்கு அப்புறமும் தியேட்டர்
நிறைந்தது, ரஜினியின் ராஜதிராஜா படத்தில் வருவது
போல தோற்றம்/ Wig போன்றவை.

குறைகள் - All Fight Scenes (சகிக்கவில்லை), பாடல்கள்
படமாக்கப்பட்ட விதம், Manish Malhotra வின்
ரஜினிக்கான Costumes.

சிவாஜி படம் அவசியமா என்றெல்லாம் பதிவுகளை எழுதுகிறார்கள். ரஜினியை பிடிக்காதவர்கள் தான் இப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்பதற்கு Logic தேட வேண்டியதில்லை. ரஜினி படத்தை எதற்காகவோ பார்த்துவிட்டு, ஆத்திரம் அடைந்து, இந்த படம் ஓடுகிறதே என்று வயித்தெரிச்சல் பட்டு இப்படிப்பட்ட பதிவுகளை இடுகிறார்கள். நாட்டில் எத்தனையோ சமூக சீர்கேடுகள் இருக்கின்றன. அதையெல்லாம் பற்றி எழுதாமல் சிவாஜி அவசியமா என்று எழுதுவது இவர்களின் கோழை தனத்தையும், வயித்தெரிச்சலையும், Dr.Ramadoss Mentality- யைத்தான் (எதிர்க்க வேண்டிய அவலங்கள் எவ்வளவோ இருக்கும் போது, ரஜினியை மட்டும் வம்புக்கிழுப்பது) காட்டுகிறது.

பி.கு. - நான் தியேட்டரில் படங்கள் பார்ப்பது மிகவும் குறைவு. இந்த வருடத்தில் பார்த்தது வேட்டையாடு விளையாடு, பருத்திவீரன், மொழி மட்டும் தான். இத்தோடு இப்போது சிவாஜி. இந்த படத்தை பார்த்ததில் என் நிதி நிலைமை ஒன்றும் கெட்டு போய்விடவில்லை. I got fully entertained for my money! சிவாஜி எனக்கு அவசியமே!!