ஞாயிறு, ஜூலை 29, 2007

சிவாஜி படம் அவசியமா?

'சிவாஜி' படத்தை புறக்கணியுங்கள், 'சிவாஜி படம் சமுதாயத்திற்கு சீர்கேடு போன்ற பதிவுகளை பார்த்தாகிவிட்டது. நான் கூட சிவாஜி படத்தை இரண்டு நாள் முன்பு வரை பார்க்காமல் இருந்தேன். காரணம் அலுவலக வேலை சம்பந்தமாக கடந்த மூன்று மாதங்களாய் இந்தோனேஷியாவில் இருக்க நேர்ந்தது தான்.

முதலில் சிவாஜி படத்தின் நிறை குறைகள்:

நிறைகள் - சூப்பர் ஸ்டாரின் Style & நடிப்பு, ஸ்ரேயாவின் அழகு,
விவேக்கின் காமெடி, சுமனின் பாத்திரம், சுஜாதாவின்
வசனம், Camera, டீக்கடை சீன், மொட்டை ரஜினி,
அதிரடி Song, 38 நாட்களுக்கு அப்புறமும் தியேட்டர்
நிறைந்தது, ரஜினியின் ராஜதிராஜா படத்தில் வருவது
போல தோற்றம்/ Wig போன்றவை.

குறைகள் - All Fight Scenes (சகிக்கவில்லை), பாடல்கள்
படமாக்கப்பட்ட விதம், Manish Malhotra வின்
ரஜினிக்கான Costumes.

சிவாஜி படம் அவசியமா என்றெல்லாம் பதிவுகளை எழுதுகிறார்கள். ரஜினியை பிடிக்காதவர்கள் தான் இப்படியெல்லாம் எழுதுகிறார்கள் என்பதற்கு Logic தேட வேண்டியதில்லை. ரஜினி படத்தை எதற்காகவோ பார்த்துவிட்டு, ஆத்திரம் அடைந்து, இந்த படம் ஓடுகிறதே என்று வயித்தெரிச்சல் பட்டு இப்படிப்பட்ட பதிவுகளை இடுகிறார்கள். நாட்டில் எத்தனையோ சமூக சீர்கேடுகள் இருக்கின்றன. அதையெல்லாம் பற்றி எழுதாமல் சிவாஜி அவசியமா என்று எழுதுவது இவர்களின் கோழை தனத்தையும், வயித்தெரிச்சலையும், Dr.Ramadoss Mentality- யைத்தான் (எதிர்க்க வேண்டிய அவலங்கள் எவ்வளவோ இருக்கும் போது, ரஜினியை மட்டும் வம்புக்கிழுப்பது) காட்டுகிறது.

பி.கு. - நான் தியேட்டரில் படங்கள் பார்ப்பது மிகவும் குறைவு. இந்த வருடத்தில் பார்த்தது வேட்டையாடு விளையாடு, பருத்திவீரன், மொழி மட்டும் தான். இத்தோடு இப்போது சிவாஜி. இந்த படத்தை பார்த்ததில் என் நிதி நிலைமை ஒன்றும் கெட்டு போய்விடவில்லை. I got fully entertained for my money! சிவாஜி எனக்கு அவசியமே!!

செவ்வாய், பிப்ரவரி 20, 2007

சமீபமாக எனக்கு பிடித்த பாடல்கள்

கீழே கொடுத்துள்ள பாடல்கள் எல்லாம் சமீபமாக (சில பழசும் இதில் அடக்கம்) எனக்கு பிடித்தவை.

அவளுக்கென்ன அய்யரு.................. ஜில்லுனு ஒரு காதல்
காதல் கொஞ்சம்....................................பச்சைக்கிளி முத்துச்சரம்
உனக்குள் நானே...................................பச்சைக்கிளி முத்துச்சரம்
டோலு டோலு தான்............................போக்கிரி
கம்மாக்கரையில.......................................Godfather
கண்ணன் வரும் வேளை....................தீபாவளி
கண்ணுக்குள் ஏதோ...............................திருவிளையாடல் ஆரம்பம்
மானாமதுரை.............................................திமிரு
மச்சக்காரி மச்சக்காரி.............................ஜில்லுனு ஒரு காதல்
மண்ணிலே மண்ணிலே.........................மழை
மயிலிறகே மயிலிறகே............................அன்பே ஆருயிரே
நெருப்பே சிக்கிமுக்கி.............................வேட்டையாடு விளையாடு
தெரியாம பாத்துபுட்டேன்.....................திருவிளையாடல் ஆரம்பம்
உருகுதே மருகுதே..................................வெயில்
வெண்ணிலவே.........................................வேட்டையாடு விளையாடு
விழிகளில் விழிகளில்............................திருவிளையாடல் ஆரம்பம்
ஏதோ நிணைக்கிறேன்...........................தலைநகரம்
சும்மா கிடந்த சிட்டுக்குருவிக்கு.........தம்பி