செவ்வாய், அக்டோபர் 03, 2017

மக்களும் இன்றைய அரசியலும் ...

மக்கள் ரொம்பவே மாறி விட்டார்கள் என்றும், இன்றைய அரசியலில் நடிகர்களுக்கு மக்களின் ஆதரவு கிடையாது என்றும் கேள்வி படுகிறோம். உதாரணம், ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டங்களில் நடிகர்களின் பங்களிப்பு இல்லவே இல்லை என்று கண்டோம். அஜித், விஜய் என்று தீவிரமான ரசிகர்கள் இருந்தாலும் அன்றாட  பிரச்சனைகளுக்கு நடிகர்களை எதிர்நோக்கி மக்கள்  இல்லை என்று சொல்கிறார்கள்.  இங்கு  தான் ஒரு முரண்பாடு தெரிகிறது.  

Image result for தமிழ் நாட்டு மக்கள் அரசியல்Image result for அரசியலில் சினிமாக்காரர்கள்

நடிகர்களுக்கு அரசியலில் ஆதரவு கிடையாது... சரி...  இப்போது இருக்கும் அரசியல்வாதிகளும் ஒருவர் பாக்கி இல்லாமல் யாரும் சுத்தமானவர் கிடையாது.  அப்படியானால் யாரை தான் மக்கள் ஆதரிப்பார்கள்.  புதிதாய் ஒருவர் முளைப்பார் என்று காத்திருப்பார்களா ?  சகாயம் போன்றவர்கள் அஞ்சுவதிலும் நியாயம் இருக்கிறது.  யோசித்து பாருங்கள் . தினம் இரண்டு மிரட்டல் போன் கால் வந்தால் எப்படி இருக்கும்.. அப்படி என்றால் மக்கள் விரும்பும் படித்த நேர்மையான மனிதர் யார் அரசியலுக்கு வரக்கூடும்??

எனக்கு தெரிந்த ஒருவர் இருக்கிறார்.  பள்ளியில் ஒழுங்காக படிக்காமல் படிப்பை பாதியில் கை விட்டார். பிறகு சொந்தமாக கடை வைக்கிறேன் என்று அதையும் சரியாக செய்யாமல் விட்டு விட்டார்.  அடுத்தது என்ன ? இருக்கவே இருக்கிறது வீடு வாடகை புரோக்கர் தொழில், ரியல் எஸ்டேட் தொழில், சீட்டு நடத்தும் தொழில்.. இதையெல்லாம் செய்கிறார்.  ஆனால் இவர்கள் இதை செய்யும் போதே அரசியலில் யாராவது இழுத்து விடுகிறார்கள்.  அவர் விஜயகாந்த் கட்சியில் சேர்ந்தார்.  விஜயகாந்த் எல்லாம் அவருக்கு பிடித்தமான நடிகர் இல்லை. ஆனாலும், கட்சியில் இருந்தால் ஒரு சப்போர்ட் என்பார்.  அங்கு அவருக்கு சரியான கவனிப்பும், வருமானமும் இல்லாததால், அதை விட்டு விட்டு இன்னொரு கட்சியில் சேர்ந்து விட்டார்.  இப்படி தான் பெரும்பாலும் வீணாய் போன இளைஞர்கள் அரசியலில் ஈடு படுகிறார்கள்.  இவர்களை கொண்டது தான் இன்றைய கட்சிகள்.  அப்படியானால் நல்ல மனிதர்கள் யார் தான் அரசியலுக்கு வருவார்கள்? வந்தால் விட்டு விடுவார்களா ?

IT கம்பனிகளில் வேலை செய்பவர்களும், அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்களும், டாக்டர்களும் , வழக்கறீங்கர்களும, engineergalum, ஆசிரியர்களும், தொழிலதிர்பகளும், விளையாட்டு வீரர்களும்  மற்றும் பல கலைஞர்களும் (பாடகர், இசையமைப்பாளர், நடனமாடுவோர்)  யாரவது அரசியலுக்கு வர யோசிப்பார்களா ?? எத்தனை பேர் இவர்களில் இது வரைக்கும் வந்து இருக்கிறார்கள்.  வர மாட்டார்கள்.  ஏனென்றால் இவர்களுக்கு பின்னால் மக்கள் சப்போர்ட் இல்லை.  இவர்களை அரசியல் வாதிகள் சுலபமாக மிரட்டியே ஓட வைத்து விடுவார்கள்.  ஒரு சமயம் ஒரு பத்திரிக்கை ஓட்டெடுப்பு நடத்தியது.  தமிழ் நாட்டில் சிறந்த பத்து விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள் என்று நீண்டது பட்டியல்.  உண்மையிலேயே பத்து பேர் எழுதுவது மிக கடினமாக இருந்தது.  இதை ஏன் சொல்கிறேன் என்றால், சினிமா காரர்களை விட மற்ற துறைகளில் பிரபலமானவர்கள் மிக மிக குறைவு.  சினிமா காரர்கள் பின்னாடி தான் மக்கள் கூட்டம் இருக்கிறது.  மக்கள் சப்போர்ட் இருந்தால் தான் அரசியல் வாதிகள் பயப்படுவார்கள். அதனால் தான் சினிமா காரர்கள் தைரியமாக அரசியலுக்கு வருகிறார்கள்.

எனவே, சினிமாக்காரன் வேண்டாம் என்று சொல்லும் மக்களே, மற்ற துறையில் யாருக்கு பின்னால் அணிவகுப்பீர்கள் என்று சொல்லுங்கள்... ஒருவரும் வரமாட்டார்கள் ... வந்தாலும் இன்றைய அரசியல் சிஸ்டத்தில் அவர்களை தாக்கு பிடிக்க விட மாட்டார்கள்...இப்போதைக்கு நம் தலை எழுத்து சினிமாக்கார்களுடன் தான்.  ரஜினியோ கமலோ நல்ல அரசியல் வாதியாக இருந்தால் ரொம்ப நல்லது...  அது எப்படியோ, தமிழ் நாட்டில் இப்படி தான் என்று இந்த நிலைமை வந்து விட்டது.  மற்ற துறையில் உள்ளவர்களுக்கு பின்னால் மக்கள் அணிதிரளும் வரை சினிமா காரர்களை ஆதரிப்போம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக