வெள்ளி, செப்டம்பர் 15, 2017

குருட்டுத்தனமா நாம் ஏன் சிலரை சப்போர்ட் செய்கிறோம் ??

பணமதிப்பிழப்பு வந்த முதல் நாள், எனக்கு இது சரிப்பட்டு வராது என்று தோன்றியது.  அன்னைக்கே அணைத்து ATM களிலும் பெரும் கூட்டம்.  ஒரே தள்ளு முள்ளு.  அடுத்த நாள் நண்பர்களுடன் பேசும் பொது சில பேர் இது நல்ல திட்டம் என்றும் சிலர் என்னை மாதிரி திட்டவும் செய்து கொண்டிருந்தார்கள்.  நல்ல திட்டம் என்று சொன்னவர்கள் எல்லாம் மோடிக்கு நேரம் கொடுக்க வேண்டும்.  கஷ்டபட்டால் தான் பின்னால் பலன் கிடைக்கும் என்றெல்லாம் சொன்னார்கள்.  நான் கேட்டேன் - அலுவலகங்களில் கூட புதிதாய் சேர்ந்தவர்களுக்கு ஆறு மாதம் தான் probation period கொடுக்கிறார்கள்.  மோடியை போன்று பிரதமர்கள் சேர்ந்த முதல் நாளிலேயே பலன் காட்ட வேண்டாமா? ... அவர் என்ன Trainee யா ? என்றெல்லாம் கேட்டேன்.

இப்போது இந்த subject பற்றி பேசும் போது, நிறைய பேர் மாறி இருப்பது தெரிகிறது.  பெட்ரோல் விலையும், GST யினால் வந்த விலையேற்றமும், GDP கீழே போய்க் கொண்டிருப்பதும் மற்றும் neet போன்ற சமுதாய பிரச்சனைகளும் மக்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனாலும், இதை எல்லாம் கவனிக்காது , இல்லை கவனிக்காதது போல சிலர் நடித்துக் கொண்டிருகின்றனர்.  இவர்கள் குருட்டுத்தனமாக ஏன் சிலரை சப்போர்ட் செய்கிறார்கள் ?  தலைப்புக்கு வந்து விட்டேன்.

நாம் ஏதேதோ காரணத்தால் சிலரை பற்றி நல்ல அபிப்ராயம் வைத்திருப்போம்.  அவரை பற்றி சமுதாயத்தில் நல்ல பிம்பம் இருக்கும் வரை நமக்கும் சந்தோசம்.  நாம் அவரை சரியாக தான் கணிதிருக்கிறோம் என்று. திடீரென்று ஒரு நாள் அவர் ஒரு ஏமாற்றுகாரர்...குற்றம் புரிந்தவர் என்று கேள்விப்படும் போது அதை நம்ப நம் மனம் மறுக்கிறது.  ஏன் என்றால், இத்தனை  காலம் இவரை போய் நாம் நல்லவர் என்று நினைத்திருந்தோமே... நாம் என்ன முட்டாளா என்று நம் மனம் நம்ப மறுக்கின்றது.  அதற்கு  பதில் நாமே, இவர் அவரை காட்டிலும் நல்லவர் என்று சமாதனாம் செய்து கொள்கிறோம்.  இப்படி தான் நிறை பேருக்கு ஜெயலலிதாவை பிடித்திருந்தது.  இப்பொது அவர் குற்றவாளி எனவும், அவரால் தான் தமிழ்நாடு இப்படி கேவலமான ஒரு நிலைமைக்கு வந்து இருக்கிறது என்ற உண்மை புலப்பட வில்லை.  சமமான மன நிலையில் யோசித்தால் சுலபமாக புரியும்.  ஆனால், நாம் முட்டாளாக இருந்தோமே என்று மனம் ஒத்துக் கொள்வதில்லை.

இப்படி இருந்தால் நாம் என்றுமே முட்டாள் தனத்தில் இருந்து மீளவே முடியாது.  சூழ்நிலைக்கேற்ப மனசை மாற்றிக் கொள்ள தெரிந்திருக்க வேண்டும்.  விஜயை பிடித்து விட்டால் பிடித்தது தான்.  அஜித்தின் நல்ல குணங்கள் புரியாது.  அதே மாதிரி தான் அஜித்தை பிடித்து விட்டால் விஜயின் நல்ல விஷயங்கள் தெரியாது.  மனசை ப்ரீயா விடுங்களேன் ....கொஞ்சம் புரியுதான்னு பாப்போம் ....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக