திங்கள், ஜூன் 08, 2009

வகைப்படுத்தாதவை

1. கடந்த வாரம் Guindy ரயில் நிலையத்தில் ஒரு கணவன் மனைவிக்கிடையே
நடந்த உரையாடல். மனைவி தண்டவாளத்தை கடந்து சாலையை அடைய நடக்க ஆரம்பிக்கிறார்.
கணவன்: ஏ.. அந்த பக்கம் போகாதே. தண்டவாளத்தை தாண்டும்போது கீழே விழுந்தா என்னாவது. அங்க வெளிச்சம் வேறு இல்ல!!!
மனைவி: ஏங்க! உங்களுக்கு வாயில நல்ல வார்த்தையே வராதா? படிக்கட்டு ஏறி போனா எப்ப போய் சேர்வது? அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. வாங்க இப்படியே போகலாம்.
சொல்லிவிட்டு, கணவனையும் இழுத்துக்கொண்டு கடைசியில் தண்டவாளத்தின் மேல் நடந்து தான் கடந்தார்கள் - சண்டை போட்டுக்கொண்டு...சில சமயம் பெண்கள் உணர்ச்சி வசப்படாமல், நல்லது கெட்டது எது என்று யோசித்தும் பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.
2. கடந்த வாரம் நிறைய தமிழ் படங்கள் பார்க்க நேர்ந்தது. யாவரும் நலம், அருந்ததி, பசங்க ஆகியவை தான் அவை. இதில் யாவரும் நலம் மற்றும் அருந்ததி இரண்டும் திகில் படங்கள். நன்றாகவே இருந்தன. யாவரும் நலத்தில் டைரக்டரையும், மாதவனையும், அருந்ததியில் டைரக்டரையும் பாரட்டியாக வேண்டும். ஆனாலும் பசங்க தான் என்னை மிகவும் கவர்ந்தது. அதில் நடித்தவர்கள் எல்லோருடைய நடிப்பும் யதார்தமோ யதார்தம். நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை தொட்ட கதை. டைரக்டர் பாண்டி ராஜ்க்கும், இசையமைத்த ஜேம்ஸ் வசந்தனுக்கும், அனைத்து நடிகர்களுக்கும் என் பாராட்டுக்கள். இத்தணை படங்களை பார்த்ததும் ஒரே ஒரு உறுத்தல் மட்டும்
நெஞ்சில். இனிமேல் நல்ல படங்களை தியேட்டரில் தான் போய் பார்க்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக