சனி, செப்டம்பர் 09, 2006

வீழ்ந்து எழும் சூரியன்..

வானமும் பூமியும் தொட்டுக்கொள்ளும்
விளிம்பில் ஓர் சிவப்பு வண்ண
சிதறலில் வீழ்ந்து அணையும் சூரியன்.
சில பறவை கூட்டம் அதை கடந்து செல்லும்
நகரும் கறுப்பு புள்ளி போட்ட கோலமாய்...
நிழல் நீளும் அந்த பொழுதில்
நிமிட நேரங்களில் இருள் போர்வை
போர்த்தும் பூமி.
தூரத்தில்.. நீண்டு வளர்ந்த தென்னைமரத்தின்
தலை வந்தமரும் வெண்ணிலவு.
கீற்றினூடே மஞ்சள் ஒளிக்கீற்று வந்து
காற்றுக்கும் உற்சாகம் கிளறி விடும்.
கறுப்பு சுரங்கத்தில் வைரக்குவியலும்
அதன் வழியே ஒரு தங்கநிலவும்
ஓர் இரவு முழு பொழுதில்
களவு போவதின் கதைசொல்லும் ஈரக்காற்று
காலை கண்விழிக்கும் பூமியிடம்.
பசித்த பூமிக்கும் இன்னும் பல உயிருக்கும்
பரிமாற வேண்டி வானத்தில் அடுப்பெரிக்க
இன்னொர் முறை
சிவப்பு வண்ண சிதறலில் எழுந்துக்கொள்ளும்
சூரியன்.


6 கருத்துகள்:

  1. பறவைகளை புள்ளி வைத்த கோலத்திற்கு ஒப்பிட்டது மிகவும் கவர்ந்தது.

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா7:50 PM

    நல்ல கவிதை.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா4:53 AM

    It's really good. I expect many more such kavidhais from you.

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா9:29 AM

    இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா9:30 AM

    very good one.wonderful imagination,& the way u have put it is amazing.

    Raja

    பதிலளிநீக்கு
  6. உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி, சிவா, ராதிகா, அனிதா & ராஜா.

    பதிலளிநீக்கு