வியாழன், மே 05, 2016

கபாலி டீசர்

Image result for kabali

கபாலி டீசரை பார்த்தவுடன் தலைவர்க்கெல்லாம்  டீசர் தேவையா என்று தோன்றியது.   ஒழுங்காக படத்தின் ட்ரைலர், பாடல் வெளியீடு, பின் பட வெளியீடு என்று போய்க்கொண்டிருந்ததை இப்போது டீசர் 1, டீசர் 2 என்று விளம்பரப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.  

ஒரு நிமிடம் ஓடக்கூடிய டீசரில், பாவம் எடிட்டர் எதிர்பார்ப்புகளை கிளப்பக்கூடிய ஏகப்பட்ட சமாசாரங்களை நுழைக்க வேண்டும்.  டீசர் சரியில்லை என்றால் ஆரம்பமே சரியில்லை என்றாகிவிடும்.  இதில் மற்ற ஹீரோக்களுடனும், படங்களோடும் லைக்சுக்கும், பார்வைக்கும் ஒப்பீடு வேறு!!!  நல்ல வேளை, தலைவர் இதிலும் தான் இன்னும் சூப்பர் ஸ்டார் என்று நிருபித்து விட்டார் (12 மில்லியனுக்கும்  மேல் மக்கள் இந்த டீசரை பார்த்து இருக்கிறார்கள்).

டீசரில் ஒரு இடத்தில் தலைவர் ஒரு வசனம் பேசுகிறார்.  கபாலினா கன்னத்துல மரு வச்சுக்கிட்டு நம்பியார் கூப்பிட்டவுடனே தலைய குனிஞ்சுகிட்டு என்னங்க எஜமானு ஒருத்தன் வருவானே அவன்னு நினைச்சியாடா ?  கபாலிடா!!!  அப்படின்னு சொல்லுவார்.  ஆனால் இந்த வசனத்தில் தலைவரின் Usual வேகம் மிஸ்ஸிங்.  இதை இன்னும் கொஞ்சம் நன்றாக செய்திருக்கலாம்.  எப்படி இருந்தாலும் தலைவர் படமாச்சே, பார்த்தே தீருவோம் என்ற கட்சியை சேர்ந்தவர்கள் நிறைய பேர் இருப்பதால், இதை எல்லாம்  யாரும் கண்டுக்க போறதில்லை. மற்றபடி இந்த டீசரில் என்னால் பெரிதாக ஒன்றையும் கண்டுப்பிடிக்க முடியவில்லை. கதையையோ, டூயட்டையொ, தலைவரின் வேறு ஸ்டைலையோ எதுவுமே தெரியவில்லை.  

இன்றைய Gadget உலகத்தில் டீசர் போன்றவை  இளம் தலைமுறையினரை தங்கள் நேரத்தை விரயம் செய்யும் விஷயங்களாகவே நான் பார்க்கிறேன். ரசிகர்களின் ஆவலை தூண்டி விடுவதற்கும், முதல் காட்சிகளை அரங்கு நிறைந்த காட்சிகளாக்க வைக்க வேண்டி வெளியிடப்படுபவை தான் இந்த டீசர்கள்.   பிறகு படம் வெளியிடும் நேரத்தில், Promotion என்னும் பேரில் படத்தின் நடிகர்களின் பேட்டியை ஒளிபரப்புவார்கள்.   ஆனால் இது எல்லாம் தலைவருக்கு தேவையில்லையே....

படத்தின் ட்ரைலருக்காகவும், பாடல்களுக்காகவும் I am waiting!!!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக