நான் நகரத்து இளைஞன் தான். கிராமங்களில் ஒரு நாள் இரண்டு நாள் என்று ஒதுங்கியதோடு சரி. மற்றபடி, கிராம மக்கள் வெள்ளை மனம் கொண்டவர்கள், வீரம் மிக்கவர்கள், வீராப்பு கொண்டவர்கள் என்று கதைகளிலும் படங்களிலும் கண்டதுண்டு. அவர்களுக்கு இருக்கும் தைரியம் எனக்கு சுத்தமாக கிடையாது என்பதை ஒத்துக்கொள்ள தான் வேண்டும்.
மாட்டிற்கு கொம்பு இல்லையென்றால் கூட பக்கத்தில் நடக்கையில் ஒரு safe distance வைத்துக்கொள்வது என் வழக்கம். அப்படியும் ஒரு சமயம், நான் நின்று கொண்டிருந்த பேருந்தில் நுழையும் வேளையில், ஒரு மாடு இடையில் புகுந்து என் கட்டை விரலை மிதித்து விட்டது. அதற்கே, என் கால் பெரு விரலில் மாத கணக்காய் வலி இருந்துக் கொண்டு மாட்டின் மீது ஒரு பீதியை கிளப்பி விட்டுருந்தது.
மற்றபடி, மாடு ம்மா வென்று கத்தும், பசு பால் கொடுக்கும் என்றும், கோயில்களில் இருக்கும் நந்தி சிலைகளை பார்க்கும் போது தோன்றும் அழகும், அன்பு உணர்வும் மாட்டின் பால் நான் கொண்ட அஹிம்சை எண்ணங்கள். ஆனால், மாட்டை உசுபேத்தி, எமனிடம் கால்ஷீட்டு வாங்கி தேதி குறிக்கும் கிராம இளைஞர்களின் தைரியம் மட்டும் வெகு நாள் புரியாமல் இருந்தது. அதையே சென்னையில் மாட்டிற்கு பதில் பைக்கை (bike ) வைத்து விளையாடும் Bike racing பற்றி அறிந்த போது புரிந்து போனது. ஓடும் பாம்பை காலால் மிதிக்கும் வயதில் (25 வயது வரை) மாடு குத்தினால் உயிர் போகுமென்றோ, வேகமாக பைக் ஒட்டி சறுக்கி விழுந்தால் எமலோகம் என்பதும் புரிவதில்லை.
சரி, மாடு பிடிப்பது, பைக் ரேஸ் விடுவதெல்லாம் எங்க ஏரியா உள்ள வராதே என்று இளைஞர்கள் வேண்டுமானால் சொல்லலாம். இது, குழந்தைகள் தீயில் விளையாடுவது போன்றது. இந்த பிரச்னையை கோர்ட் கையாண்டு தீர்ப்பு அளித்திருக்கிறது. அரசியல் வாதிகள் ஏன் தன் சொந்த லாபத்திற்காக இதில் மல்லு கட்டுகிறார்கள்? ஒரு மைதானத்தில் பத்து காளை மாடுகளையும் இருபது அரசியல்வாதிகளையும் விட்டு ஏறு தழுவுதல் என்ற வீர விளையாட்டை விளையாட செய்ய வேண்டும்.
மாட்டிற்கு வலிக்கும் என்று PETA சொல்வதெல்லாம் அப்புறம். மனிதனுக்கு வலிக்காதா? ஒரு உயிர் என்றாலும் மனித உயிரல்லாவா? அரிது அரிது மானிடனாய் பிறப்பது அரிது என்பது உண்மையல்லவா? ஜல்லிகட்டை தடை செய்யுங்கள்!!! நான் சொன்னா உடனே நிறுத்திடுவாங்களா ! ஏதோ, என்னை மாதிரி ஒத்த கருத்து உள்ளவர்கள் நாலு பேர் இருந்தா எனக்கு ஒரு சந்தோஷம்.
சென்னையில் பைக் ரேஸிங் தடை செய்யப்பட்டுள்ளது. கிராமத்து இளைஞர்களே!!! ஜல்லிகட்டை எப்போது நிறுத்த போகிறீர்கள்???
அன்பு நண்பரே,உங்கள் மனிதாபிமானத்திற்கு நன்றி.ஆனால் ஜல்லிகட்டு தடையில் உலக அரசியல் உள்ளது.காளை அளியாமல் இருக்க ஜல்லிக்கட்டு தேவை.அதில் முறையான பாதுகாப்பு வேண்டியது அவசியம்.
பதிலளிநீக்குநன்றி கமலக் கண்ணன். காளை அழியாமல் இருக்க ஜல்லிகட்டு தேவை என்ற உங்கள் கருத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆவலாய் இருக்கிறேன்.
பதிலளிநீக்குAmudhan,
பதிலளிநீக்குThe article is made with different eye and approach.For any issue, there are two sides.You have pointed out the other side in a convincing manner.
Regards
V.Thiagarajan
Thiaga, many people are whole-heartedly supporting Jallikattu. Yet to understand this Game!!! Probably I am concerned at the possibility of human life.
பதிலளிநீக்கு