முதலிலேயே சொல்லிவிடுகிறேன். நான் டெல்லி பக்கம் இல்லை. இருந்தாலும், கடந்த நாட்களாக நடந்து வரும் neet தேர்வுக்கான மாணவ எதிர்ப்பு, 85, 90 களில் MGR, கருணாநிதி காலத்தில் நடந்த போராட்டங்களை நினைவு படுத்துகின்றன. அப்போதெல்லாம், அடிக்கடி ஸ்கூல் மற்றும் காலேஜ் லீவ் விடுவார்கள். அது indefinite strike ஆகவும் இருக்கும். எங்களுக்கு பிரச்சனையின் சாரம் என்னவெல்லாம் தெரியாது. லீவ் கிடைத்தது என்று மிகவும் சந்தோஷமாக இருக்கும். இப்போது நடக்கும் neet பிரச்சனையை மாணவர்கள் சரியாக புரிந்து கொண்டார்களா என்று சந்தேகம் வருகிறது. யாராவது அரசியல்வாதிகள் பின்னால் இருந்து இயக்குகிறார்களா என்று தெரியவில்லை ..
மருத்துவ படிப்பு தேர்வுக்கு Neet மதிப்பெண்கள் + பள்ளி மதிப்பெண்கள் இரண்டையும் எடுத்துக் கொண்டால் பிரச்சனையே இல்லையே...எதற்கு நீட்டே தேவையில்லை என்று போராட வேண்டும்? சின்ன சின்ன பிள்ளைகள் எல்லாம் பெண்கள் உட்பட வீதிக்கு வந்து போராட ஆரம்பித்துவிட்டார்கள். பிரபலங்கள் இன்னும் twitter விட்டு வராத நிலையில் மக்கள் போராடுவது நல்ல முன்னேற்றம் தான். இருந்தாலும் நமக்கு நல்ல வழிகாட்டி இல்லையே.. நீட்டும் வேண்டும் , பள்ளி மதிப்பெண்களும் வேண்டும் என்று யாரும் வழி காட்டுற மாதிரி தெரியலையே ...
இதில் பள்ளிகூடங்கள் செய்யும் அநியாயத்தையும் சொல்லியாக வேண்டும். தங்கள் பாட வகுப்பிற்கு மிக சாதரணமான பாடத்திட்டத்தை வைத்துகொண்டு neet தேர்வுக்கும், IIT தேர்வுக்கும் சிறப்பு வகுப்புகளை அநியாய விலைக்கு மாணவர்களை சேர்த்து கொள்கிறார்கள். இது CBSE பள்ளிகளுக்கும் பொருந்தும். இப்படி கல்வியை இவர்கள் கொள்ளையடிக்க மட்டுமே பயன்படுத்தினால் அப்புறம் அணிதாக்கள் எப்படி டாக்டர்கள் ஆக முடியும் ??
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக