இந்தியாவில் 2000 பேருக்கு ஒரு டாக்டர் தான் இருக்கிறார். இன்றும் கூட , நமக்கு ஏதாவது ஒன்றென்றால் பக்கத்தில் நல்ல டாக்டர் தேடி தவிக்கிறோம். டாக்டருக்கு அவ்வளவு demand. ஆனாலும் கூட, நம் இந்தியாவில் 199 cut off வாங்குவோருக்கு டாக்டர் சீட் கிடைக்கும். 190 cut off வாங்குவோருக்கு கிடைக்காமல் போகலாம். 190 க்கும் , 199 க்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம். அறிவளவில், இரண்டு மாணவரிடையே எவ்வளவு வித்தியாசம் இருக்க கூடும்?? இன்னும் அதிகமாக மருத்துவ கல்லூரிகள் திறந்து அதிக மாணவர்களை எடுத்துக் கொண்டால் தான் என்ன ???
என்னை பொறுத்தவரை ஒரு சீனியர் டாக்டரிடம் ஒரு படிக்காத பையனை சேர்த்து, அவருடன் அவன் ஒரு பத்து வருடம் இருந்தால் மருத்துவம் பார்க்க பழகி கொள்வான். எதற்கு இவ்வளவு ஸ்க்ரீனிங்.. மண்ணாங்கட்டி . .. வத வத என்று மக்கள் வெள்ளத்தை வைத்துக் கொண்டு மருத்துவர்கள் பற்றாக்குறை வேறு !! அந்த காலத்தில் மருத்துவம் பார்க்க எந்த தேர்வு எழுதினார்கள். neet வரும்..வராது... என்று மாணவ செல்வங்களை எவ்வளவு அலைகழீத்தீர்கள்...எத்தனை பேர் டாக்டர் சீட் கிடைக்காதென்று பொறியியல் கல்லூரியில் பணம் கட்டி சேர்த்து விட்டிருக்கிறார்கள். நாளைக்கு அந்த பணம் திரும்பி கிடைக்குமா ? அந்த நஷ்ட ஈடை அரசு கொடுக்குமா ? கோர்ட் உத்தரவு போடுமா ?
தயவு செய்து அதிக மருத்துவ கல்லூரிகள் திறவுங்கள் ..neet கூட + 2 மார்க்கையும் சேர்த்து தேர்ந்தெடுங்கள்.. மாணவர்கள் வாழ்க்கையில்
விளையாடாதீர்கள் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக