வெள்ளி, செப்டம்பர் 15, 2017

குருட்டுத்தனமா நாம் ஏன் சிலரை சப்போர்ட் செய்கிறோம் ??

பணமதிப்பிழப்பு வந்த முதல் நாள், எனக்கு இது சரிப்பட்டு வராது என்று தோன்றியது.  அன்னைக்கே அணைத்து ATM களிலும் பெரும் கூட்டம்.  ஒரே தள்ளு முள்ளு.  அடுத்த நாள் நண்பர்களுடன் பேசும் பொது சில பேர் இது நல்ல திட்டம் என்றும் சிலர் என்னை மாதிரி திட்டவும் செய்து கொண்டிருந்தார்கள்.  நல்ல திட்டம் என்று சொன்னவர்கள் எல்லாம் மோடிக்கு நேரம் கொடுக்க வேண்டும்.  கஷ்டபட்டால் தான் பின்னால் பலன் கிடைக்கும் என்றெல்லாம் சொன்னார்கள்.  நான் கேட்டேன் - அலுவலகங்களில் கூட புதிதாய் சேர்ந்தவர்களுக்கு ஆறு மாதம் தான் probation period கொடுக்கிறார்கள்.  மோடியை போன்று பிரதமர்கள் சேர்ந்த முதல் நாளிலேயே பலன் காட்ட வேண்டாமா? ... அவர் என்ன Trainee யா ? என்றெல்லாம் கேட்டேன்.

இப்போது இந்த subject பற்றி பேசும் போது, நிறைய பேர் மாறி இருப்பது தெரிகிறது.  பெட்ரோல் விலையும், GST யினால் வந்த விலையேற்றமும், GDP கீழே போய்க் கொண்டிருப்பதும் மற்றும் neet போன்ற சமுதாய பிரச்சனைகளும் மக்கள் எண்ணத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனாலும், இதை எல்லாம் கவனிக்காது , இல்லை கவனிக்காதது போல சிலர் நடித்துக் கொண்டிருகின்றனர்.  இவர்கள் குருட்டுத்தனமாக ஏன் சிலரை சப்போர்ட் செய்கிறார்கள் ?  தலைப்புக்கு வந்து விட்டேன்.

நாம் ஏதேதோ காரணத்தால் சிலரை பற்றி நல்ல அபிப்ராயம் வைத்திருப்போம்.  அவரை பற்றி சமுதாயத்தில் நல்ல பிம்பம் இருக்கும் வரை நமக்கும் சந்தோசம்.  நாம் அவரை சரியாக தான் கணிதிருக்கிறோம் என்று. திடீரென்று ஒரு நாள் அவர் ஒரு ஏமாற்றுகாரர்...குற்றம் புரிந்தவர் என்று கேள்விப்படும் போது அதை நம்ப நம் மனம் மறுக்கிறது.  ஏன் என்றால், இத்தனை  காலம் இவரை போய் நாம் நல்லவர் என்று நினைத்திருந்தோமே... நாம் என்ன முட்டாளா என்று நம் மனம் நம்ப மறுக்கின்றது.  அதற்கு  பதில் நாமே, இவர் அவரை காட்டிலும் நல்லவர் என்று சமாதனாம் செய்து கொள்கிறோம்.  இப்படி தான் நிறை பேருக்கு ஜெயலலிதாவை பிடித்திருந்தது.  இப்பொது அவர் குற்றவாளி எனவும், அவரால் தான் தமிழ்நாடு இப்படி கேவலமான ஒரு நிலைமைக்கு வந்து இருக்கிறது என்ற உண்மை புலப்பட வில்லை.  சமமான மன நிலையில் யோசித்தால் சுலபமாக புரியும்.  ஆனால், நாம் முட்டாளாக இருந்தோமே என்று மனம் ஒத்துக் கொள்வதில்லை.

இப்படி இருந்தால் நாம் என்றுமே முட்டாள் தனத்தில் இருந்து மீளவே முடியாது.  சூழ்நிலைக்கேற்ப மனசை மாற்றிக் கொள்ள தெரிந்திருக்க வேண்டும்.  விஜயை பிடித்து விட்டால் பிடித்தது தான்.  அஜித்தின் நல்ல குணங்கள் புரியாது.  அதே மாதிரி தான் அஜித்தை பிடித்து விட்டால் விஜயின் நல்ல விஷயங்கள் தெரியாது.  மனசை ப்ரீயா விடுங்களேன் ....கொஞ்சம் புரியுதான்னு பாப்போம் ....

ஞாயிறு, செப்டம்பர் 10, 2017

NEET: மாணவர்களை தூண்டிவிடும் அரசியல்வாதிகள் !!!

முதலிலேயே சொல்லிவிடுகிறேன்.  நான் டெல்லி பக்கம் இல்லை. இருந்தாலும், கடந்த நாட்களாக நடந்து வரும் neet தேர்வுக்கான மாணவ எதிர்ப்பு, 85, 90 களில் MGR, கருணாநிதி காலத்தில் நடந்த போராட்டங்களை நினைவு படுத்துகின்றன.  அப்போதெல்லாம், அடிக்கடி ஸ்கூல் மற்றும் காலேஜ் லீவ் விடுவார்கள்.  அது indefinite strike ஆகவும் இருக்கும்.  எங்களுக்கு பிரச்சனையின் சாரம் என்னவெல்லாம் தெரியாது.  லீவ் கிடைத்தது என்று மிகவும் சந்தோஷமாக இருக்கும்.  இப்போது நடக்கும் neet பிரச்சனையை மாணவர்கள் சரியாக புரிந்து கொண்டார்களா என்று சந்தேகம் வருகிறது. யாராவது அரசியல்வாதிகள் பின்னால் இருந்து இயக்குகிறார்களா என்று தெரியவில்லை ..

மருத்துவ படிப்பு தேர்வுக்கு Neet மதிப்பெண்கள் + பள்ளி மதிப்பெண்கள் இரண்டையும் எடுத்துக் கொண்டால் பிரச்சனையே இல்லையே...எதற்கு நீட்டே தேவையில்லை என்று போராட வேண்டும்?  சின்ன சின்ன பிள்ளைகள் எல்லாம் பெண்கள் உட்பட வீதிக்கு வந்து போராட ஆரம்பித்துவிட்டார்கள். பிரபலங்கள் இன்னும் twitter விட்டு வராத நிலையில் மக்கள் போராடுவது நல்ல முன்னேற்றம் தான்.  இருந்தாலும் நமக்கு நல்ல வழிகாட்டி இல்லையே.. நீட்டும் வேண்டும் , பள்ளி மதிப்பெண்களும் வேண்டும் என்று யாரும் வழி காட்டுற மாதிரி தெரியலையே ...

இதில் பள்ளிகூடங்கள் செய்யும் அநியாயத்தையும் சொல்லியாக வேண்டும். தங்கள் பாட வகுப்பிற்கு மிக சாதரணமான பாடத்திட்டத்தை வைத்துகொண்டு neet தேர்வுக்கும், IIT தேர்வுக்கும் சிறப்பு வகுப்புகளை அநியாய விலைக்கு மாணவர்களை சேர்த்து கொள்கிறார்கள்.  இது CBSE பள்ளிகளுக்கும் பொருந்தும்.  இப்படி கல்வியை இவர்கள் கொள்ளையடிக்க மட்டுமே பயன்படுத்தினால் அப்புறம் அணிதாக்கள் எப்படி டாக்டர்கள் ஆக முடியும் ??  

Image result for class viii maths book cbseImage result for class viii maths book cbse

சனி, செப்டம்பர் 02, 2017

மருத்துவ கல்லூரிகள் அதிகம் திறந்தால் தான் என்ன ??

Image result for mbbs admission


இந்தியாவில் 2000 பேருக்கு ஒரு டாக்டர் தான் இருக்கிறார்.  இன்றும் கூட , நமக்கு ஏதாவது ஒன்றென்றால் பக்கத்தில் நல்ல டாக்டர் தேடி தவிக்கிறோம். டாக்டருக்கு அவ்வளவு demand.  ஆனாலும் கூட, நம் இந்தியாவில் 199 cut off வாங்குவோருக்கு டாக்டர் சீட் கிடைக்கும்.  190 cut off வாங்குவோருக்கு கிடைக்காமல் போகலாம்.  190 க்கும் , 199 க்கும் எவ்வளவு பெரிய வித்தியாசம். அறிவளவில், இரண்டு மாணவரிடையே எவ்வளவு வித்தியாசம் இருக்க கூடும்??  இன்னும் அதிகமாக மருத்துவ கல்லூரிகள் திறந்து அதிக மாணவர்களை எடுத்துக் கொண்டால் தான் என்ன ??? 

என்னை பொறுத்தவரை ஒரு சீனியர் டாக்டரிடம் ஒரு படிக்காத பையனை சேர்த்து,  அவருடன் அவன் ஒரு பத்து வருடம் இருந்தால் மருத்துவம் பார்க்க பழகி கொள்வான். எதற்கு இவ்வளவு ஸ்க்ரீனிங்.. மண்ணாங்கட்டி . .. வத வத என்று மக்கள் வெள்ளத்தை வைத்துக் கொண்டு மருத்துவர்கள் பற்றாக்குறை வேறு !! அந்த காலத்தில் மருத்துவம் பார்க்க எந்த தேர்வு எழுதினார்கள்.  neet வரும்..வராது... என்று மாணவ செல்வங்களை எவ்வளவு அலைகழீத்தீர்கள்...எத்தனை பேர் டாக்டர் சீட் கிடைக்காதென்று பொறியியல் கல்லூரியில் பணம் கட்டி சேர்த்து விட்டிருக்கிறார்கள். நாளைக்கு அந்த பணம் திரும்பி கிடைக்குமா ?  அந்த நஷ்ட ஈடை அரசு கொடுக்குமா ? கோர்ட் உத்தரவு போடுமா ?

தயவு செய்து அதிக மருத்துவ கல்லூரிகள் திறவுங்கள் ..neet கூட + 2 மார்க்கையும் சேர்த்து தேர்ந்தெடுங்கள்.. மாணவர்கள் வாழ்க்கையில்
விளையாடாதீர்கள் ...