செவ்வாய், ஆகஸ்ட் 29, 2017

கமலுக்கு ஒரு விண்ணப்பம் ..


Image result for kamalhassan

கமலுடைய tweets சந்தோசம் அளிக்கிறது.   அட்லீஸ்ட், இவராவது அரசியல் வாதிகளை தைரியமாக விமர்சிக்கிறாரே என்று.  ஆனால், தி.மு .க பற்றி இவர் விமர்சனம் வைப்பதில்லை என்றும், ஜெயலலிதா இருக்கும் போது இவர் ஏன் விமர்சனம் வைக்கவில்லை என்று இவர் மேலயும் விமர்சனம் இருப்பது வேறு கதை.  

கமலின் தமிழ் நாட்டின் அரசியல் மீதான கோபம் வரவேற்க கூடியது தான் என்றாலும், அவர் இதையும் தாண்டி practicalaaga ஏதாவது செய்ய வேண்டும் என்று எதிர்பார்கிறேன்.  ஏனென்றால், வர வர தமிழ் நாட்டு மக்களுக்கு எப்பேர்பட்ட அதிர்ச்சி தர கூடிய செய்தி என்றாலும் அவையெல்லாம் மிகவும் சாதாரணமாக ஆகி விட்டது.  ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம், எடப்பாடி, பன்னீர்செல்வம் அடிக்கும் லூட்டிகள், நிலையான அரசு இல்லாதது, ப.ஜ.கவின் நேரடியான தலையீடு, சசிகலாவின் ஜெயில் சலுகை இப்படி எல்லாமே ஒன்றை ஒன்று மிஞ்சும் செய்திகள்.  இதையெல்லாம் தினமும் பார்த்தும், கேட்டும், விவாதித்தும் கடைசியில் இது எல்லாம் ஒன்றும் இல்லை என்றாகி விட்டது.  இந்த வரிசையில் கமலின் tweets கூட ஒன்றுமில்லை என்றாகிவிட வாய்ப்பிருக்கிறது. 

அதனால் கமல் tweets தாண்டி உருப்படியாக ஏதாவது செய்ய வேண்டுமென்றால், அவர் வீதிக்கு வந்து போராட வேண்டும்.  அதற்காக கொடி பிடிப்பது, லத்தியில்எ அடி வாங்குவது, ஜெயில் எல்லாம் போக வேண்டியதில்லை.  கமலுக்கு இதுயெல்லாம் இமாலய தூரம்.  ஒன்னு செய்யலாம்.  தன் தொகுதியில் இருக்கும் குடிமை பிரச்சனைகளுக்கு (civic issues), வார்டு கவுன்சிலரிடம், corporation அதிகாரிகளிடமும் புகார் தெரிவிக்கலாம். புகார் கொடுக்கும் போது தன் ரசிகர்களை  ஒன்றிணைத்து அதற்கு தலைமை தாங்கலாம்.  நிச்சயம் இந்த நடவடிக்கை அணைத்து மீடியாக்களையும் கவரும்.  விவாத பொருளாகும்.  இப்படியும் அந்த பிரச்சனைகள் தீர வில்லை என்றால், அடுத்த கட்டமாக கோர்ட்டில் பொது நல வழக்காக தொடுக்கலாம்.  டிராபிக் ராமசாமி செய்யும் போது கமல் செய்ய முடியாதா ??  

சரி , இதெல்லாம் கமலால் செய்ய முடியுமா ??  செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.  வெறும் ட்விட்டரில் காகித போர் செய்வது எந்த விதத்திலும் பயன் தரக்கூடியதில்லை ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக