சனி, மே 20, 2017

ரஜினியிடம் நம்பிக்கை சுடர்

Image result for rajinikanth raajadhi raja


இதற்கு  முந்தைய பதிவுகளில் கூடிய விரைவில் தமிழகத்தில் ஒரு நல்ல தலைவர் வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று எழுதி இருந்தேன். அது ரஜினியாக இருக்க கூடாதா என்று ஏக்கம் இருந்தாலும் இப்படி திடீரென்று அவர் அறிவிப்பார் என்று நினைக்கவில்லை. ஆனால் புலி வருது கதையாய் இத்தனை வருடங்களாக மக்களை காக்க வைத்ததில் மக்களுக்கு  அவர் மேல் நிறையவே கோபம் இருப்பது தெரிகிறது.  

ட்விட்டர், Facebook போன்றவற்றில் வரும் சில ரஜினி வெறுப்பு பதிவுகள் மிகுந்த ஆச்சர்யம் அளிக்கின்றன.  ஒருவரை இப்படியா நேசிக்க முடியும் என்று ரஜினி ரசிகர்களை (வெறியர்களை) சொல்லுவார்கள்.  அதே போல தான் ஒரு மனிதனை இப்படியும் வெறுக்க முடியுமா என்பதை போல இருக்கின்றன அவர்கள் பதிவுகள்.  ரஜினி விஷயத்தில் இரு பிரிவுகள் மட்டுமே இருக்கிறது.   ஒன்று அவரை பிடிப்பவர்கள். அல்லது அவரை வெறுப்பவர்கள்.  என்னை பொறுத்த மட்டில், ரஜினியை வெறுப்பவர்கள் தங்களை அறிவாளிகள் என்று நினைத்து கொள்ளும் அரை வேக்காடுகள் (Pseudo Intellectuals).  ரஜினி படத்தை வானூர்தியில் வரைந்ததை கண்டவுடன் இவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்?  இந்தியா முழுவதும் ரஜினியின் பிரபலம் வளர்வதை கண்டு இவர்கள் வயிறு எப்படி எரிந்திருக்கும்.  எப்போது கிடைக்கும் ரஜினியை திட்டும் சான்ஸ் என்று காத்திருந்தவர்களுக்கு இப்போது கிடைத்திருக்கிறது. 

கன்னடத்து ரஜினி, மராட்டிய ரஜினி என்று என்னைய்யா இது.  நம் நாட்டை குஜராத்தி மோடி தானே ஆண்டு கொண்டிருக்கிறார்.  தமிழ் நாடும் சேர்த்து தானே.  இல்லை எங்கள் தமிழ் நாட்டுக்கு தமிழ்  பிரதமர் தான் வேண்டும் என்று சொல்வீர்களா.  தமிழ் நாட்டு கவர்னர் யார்? தமிழ் நாட்டை சேர்ந்தவரா?  ரஜினியை வந்தேறி என்று சொல்வது இன்னும் அபத்தம். அப்படியானால், தமிழ் நாட்டில் இருந்து எத்தனையோ நாடுகளில் குடிபெயர்ந்திருக்கும் தமிழர்களை வெளியேறிகள் என்று சொல்லனுமா? இவர்கள் மண்டைக்குள் என்ன ஒட்டடையா இருக்கிறது. 

இது வரைக்கும் ரஜினி தமிழ் நாட்டுக்கு என்ன செய்தார் என்று கேள்வி அபத்தமாக இல்லையா?  அவர் இன்னும் சினிமாவில் தான் இருக்கிறார். இனிமேல் தான் அரசியலுக்கு வர போகிறார். அவர் அரசியலுக்கு வந்த பின்னர் தான் அரசியல் பற்றிய கேள்விகள் கேட்க வேண்டும்.  அதுவும் இல்லாமல் அவர் அரசியல் பற்றி இப்போது பேசியது அவரின் ரசிகர்களிடம் தானே... பிரஸ் மீட் வைத்து அதனை மீடியாக்களை அழைத்து அரசியலுக்கு வருவது பற்றி மக்களுக்கா தெரிவித்தார்??  ரஜினியின் @superstarrajini என்ற ட்விட்டர் tag வேறு இவர்களுக்கு கிடைத்து விட்டது.  இந்த பச்சை தமிழர்கள் தங்கள் தமிழ் மொழியில் தங்களுக்கு தெரிந்த கெட்ட கெட்ட வார்த்தைகளை எல்லாம் போட்டு ரஜினியை tag செய்து tweet செய்கிறார்கள்.  தனிப்பட்ட முறையில் இவர்களுக்கு ரஜினி என்ன தீங்கு செய்து விட்டார்.  ரஜினி இவர்கள் யாரையும் மிரட்ட மாட்டார்... ஆள் வைத்து அடிக்க மாட்டார் என்ற தைரியம் தானே...ஒன்றுமே செய்யாத MLA, விவசாயிகள் பிரச்சனை தீர்க்க முடியாத மந்திரிகள் இவர்களை கெட்ட வார்த்தைகள் போட்டு திட்ட முடியுமா?  

சரி, தலைப்புக்கு வருகிறேன்.  ரஜினியிடம் அரசியல் விஷயத்தில் தெரியும் பிளஸ் பாயிண்டுகள் என்ன ?

1.  தன்னை எதிர்க்கும் யாரையும் பதிலுக்கு எதிர்ப்பது கிடையாது...பழைய தமிழ்நாட்டில் நாம் பார்த்த அரசியல் நாகரீகம்..
2.  இப்போது நடத்திய ரசிகர்கள் கூட்டத்தை ஒழுங்குமுறையாக நடத்தியது.. சாராய, பிரியாணி பாக்கெட் இல்லாமல்... அடையாள அட்டையோடு..
3.  சிஸ்டம் சரியில்லை என்று சரியாக சொன்னது.  ஒரு டிராபிக் சிக்னல் சரியில்லை என்றால் எப்படி டிராபிக் ஜாம் ஆகும் என்று நினைத்து பாருங்கள்.  அதற்காக மக்களை குறை சொல்ல முடியுமா ??
4.  எல்லாவற்றை காட்டிலும் முக்கியமாக பணம் இல்லாதவர்கள் விலகி விடுங்கள். ஏமாந்து போவீர்கள் என்று தனது ரசிகர்களை பார்த்தே சொன்ன தைரியம்.  இந்த  மாதிரி இந்திய அரசியலில் எந்த அரசியல் வாதியும்  சொன்னது கிடையாது.  
5.  குடியை விடுங்கள் சிகரெட்டை விடுங்கள் என்று அன்பாக அட்வைஸ் செய்வது....

இது வரைக்கும் ரஜினிக்கு மக்களிடம் இருக்கும் அரசியல் சப்போர்ட் பற்றி எத்தனையோ opinion poll வந்து விட்டன.  அத்தனையிலும் மினிமம் 40 % சப்போர்ட் ரஜினிக்கு கிடைத்து இருக்கிறது.  60% எதிர்க்கிறார்கள்.   அரசியலுக்கு வருவதற்கு முன்னரே 40% ஆதரவு என்றால், வந்தவுடன் ???? 
சும்மா அதிருதுல்ல !!!  

கச்ச தீவை புடுச்சுட்டு வருவோம், தமிழ் மண்ணை தமிழன் தான் ஆள வேண்டும்... காவிரி தண்ணீர் கொண்டு வருவோம் என்று வெற்று அரசியல் செய்து கொண்டிருப்பர்கள் பயந்து தான் போயிருக்கிறார்கள்.  ரஜினியின் படம் வானூர்தியில் வரைய பார்த்த ரஜினியை வெறுப்பவர்களுக்கு அப்போது பாதி உயிர் போயிருந்தது என்றால், இப்போது ரஜினி அரசியலுக்கு வருவேன் என்று கூறியுள்ளது மீதி உயிரை எடுத்து விட்டது...அப்பப்பா என்னா புலம்பல்...

நீங்கள் அரசியலுக்கு வாருங்கள் தலைவா....



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக