செப்டம்பர் முதல் ஒரிஜினல் ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வண்டி ஒட்டி மாட்டினால் 3 மாத சிறை தண்டனை அல்லது 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது. சிறை அளவுக்கு தண்டனையை நீட்டி முழக்க மக்கள் மீது கொண்டிருக்கும் அக்கறை என்று சொல்லுகிறார்கள். இதனால் சாலை விபத்துக்களை குறைக்கலாம் என்று யாரோ அரைகுறை அறிவு ஜீவி சொல்லி செயல் படுத்த போகிறார்கள்.
ஆனால், பல விபத்துக்கள் அரசாங்கத்தின் கவனக் குறையால் ஏற்படுகிறதே!! சாலையில் தென்படும் குண்டு குழிகள், ஸ்பீட் breakerin மேல் அழிந்து போன சாயம், வேலை செய்யாத டிராபிக் சிக்னல், சாலை விதிகளை மதிக்காத பேரூந்துகள், தண்ணீர் லாரிகள், குறைந்த எண்ணிக்கை பேருந்துகள், ரயில்கள், நேரத்துக்கு வராத அரசு வாகனங்கள்....முட்டாள்தனமான சாலை வளைவுகள், அறிவிப்புகள் இல்லாதது போன்ற பல காரணங்களால் ஏற்படும் விபத்துக்களுக்கு அரசு தான் காரணம். அரசை யார் கண்டிக்க போகிறார்கள். இப்போதுள்ள கோர்ட் கேள்வி மேல் கேள்வி கேட்பதோடு சரி..
ஒரு முறை நான் எப்போதும் செல்லும் சாலையில் காரில் சென்றுகொண்டிருந்தேன். ஒரு இடத்திற்கு வந்தவுடன் இடது புறமாக திரும்ப வேண்டும். அங்கே எப்போதும் free left தான் இருக்கும். அதனால் நான் வழக்கமாக இடது புறத்தில் திரும்பியவுடனும், ஒரு டிராபிக் போலீஸ் கார் என்னை பிடித்துவிட்டார். என்ன என்று கேட்ட போது இங்கே free left இல்லையென்றார். அதற்கு புதிதாய் ஒரு இடத்தில் (பார்பதற்கே சிரமமான இடத்தில்) நட்டு வைத்திருந்த NO FREE LEFT அறிவிப்பு பலகையை காண்பித்தார். அதற்கு முன்பு அந்த அறிவிப்பு அங்கே இல்லை. ஓஹோ ...போலீஸ் கார் சட்டை பை நிரப்பி கொள்ள செய்த வேலை போலிருக்கிறது என்று புரிந்தது. நான் படும் துயரமும் , ஆச்சரியத்தையும் பார்த்து அவருக்கு சிரிப்பு வேறு வந்தது. திடீரென்று அங்கே ஒரு அறிவிப்பு பலகையை வைத்து பணம் பிடிங்கியதால் அது அவருக்கு ஹாசியமாய் பட்டது.
இப்படி தான் நம் சாலை விதிகள் சிரிப்பாய் சிரிக்கிறது. ஆனால் இம்சை என்னமோ மக்களுக்கு தான். யாரவது PIL (பொது நல வழக்கு) போட்டு இந்த செப்டம்பர் மாத ஓட்டுனர் உரிமம் விதியை நிறுத்தி விட்டால் நன்றாக இருக்கும். ஒரிஜினல் உரிமம் தொலைந்து விட்டோ, damage ஆகிவிட்டாலோ, இன்னொன்று வாங்க நாம் எவ்வளவு கஷ்ட படனும்னு யோசித்தால் ......