புதன், மே 27, 2009

பிராபகரன் சுதந்திர போராட்டத் தியாகியா? தீவிரவாதியா?

இந்த தலைப்பு சமீப காலமாக என்னை குழப்பி வருகிறது. நான் பிரபாகரனைப் பற்றி அறிந்தது எல்லாம், தமிழ் பத்திரிக்கைகள் மூலமாகவும், தமிழ்நாட்டு அரசியல் வாதிகளின் மூலமாகவும் தான். அவை எல்லாமே எனக்கு அவர் மேல் ஒரு நல்ல அபிப்பிராயத்தையே உண்டு பண்ணியிருக்கிறது. மனதை தொட்டு சொல்வதென்றால், எனக்கு பிராபகரன் மேல் ஒரு Soft Corner உண்டு. இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தவொரு இடையூறும் செய்யாமல் இருந்தது, இத்தனை தமிழ் வீரர்களை போராட்த்தில் பங்கேற்க செய்தது, Colombo போன்ற இலங்கை நகரங்களில் நேரடியாக மக்களை தாக்காதது, அவர்களின் தமிழ் மேல் உள்ள ஈடுபாடு, கட்டுப்பாடு போன்றவை.

ஆனால், இங்கு இந்தியாவில், Times now, NDTV போன்ற தொலைக்காட்சி ஊடகங்களில் பிராபகரனை தீவிரவாதியாகவே செய்தியிட்டு வருகிறார்கள்.
அவர் தீவிரவாதி என்று நம்பும் எவராது இருந்தால் தயவு செய்து அதற்கு ஆதாரமாக விளக்கங்கள் (உதாரணத்தோடு) அளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். Let us clarify ourselves with the Data.

5 கருத்துகள்:

  1. இந்த ஊடகங்கள் எப்போதும் தமது நிலையிலிருந்து மாறப்போவதில்லை. ஏதாவது பரபரப்புக் கொடுக்கவே விரும்புகின்றன. ஒரு இனத்தின் உண்மையான துயர் புரியாது தமது சுயநலங்களில் கவனமாகவுள்ளார்கள். என்ன செய்வது வலியவன் வாழ்வான் என்பதற்கமைய நாங்கள் வலிமையை இழந்து போனோம். ஆளாளுக்கு அவதாரம் எடுக்கிறார்கள்.
    எங்கள் தலைவன் எங்களுக்குக் காலம் தந்த கொடை அந்தப்பெருஞ்சூரியனை வஞ்சம் கொண்டு போய்விட்டது.
    அவனில்லா வெறுமையை இந்த உலகம் எங்களுக்கு நினைவுபடுத்திக் கொண்டேயிருக்கிறது.

    சாந்தி

    பதிலளிநீக்கு
  2. Good argumental thinking Amudha, the same question rose in my mind too, that how he differs from Terrorists. If seen from any terrorists point of view he too is fighting for his rights / what he thinks is right. Most often we abruptly cannot say the idealogy of terrorits are illogical. Some points as you say that LTTE has never attacked Singalese public are showing his conduct. And ofcourse non Tamilians see him as terrorits which is mostly because of not knowing the full background and the assassination of (their)our Prime minsiter. It is not only the case of Prabakaran, but also the epic Ravanan and Veerappan,the anti heros whom the Tamils see as a Heroes, unlike rest of India. Though the casue of Prabakaran was for good and he had been good with his people. He had ruthlessly killed anybody, even Tamils, who differed from his ideology. Kathi yeduthavanukku Kathiyil thaan saavu enbathu pol amaithu vitathu... (Now that we could bring world attention lets fight for the cause with our voice)

    பதிலளிநீக்கு
  3. Ponnuswamy4:31 AM

    பகத்சிங்க் மற்றும் சுபாஷ் சந்திரபோஸ் சுதந்திர போராட்ட வீரர்கள் என்றால் பிரபாகரனும் ஒரு சுதந்திர போராட்ட வீரனே. வடஇந்திய பத்திரிகைகளும் வடஇந்திய அரசியல்வாதிகளுமே பிரபாகரனையும் அவரது இயக்கத்தையும் தீவிரவாதியாக உள்நோக்கத்தோடு செய்தி வெளியிடுகிறார்கள். இதற்கு மத்திய ஆளும் வர்க்கமும் முதுகெலும்பில்லாத தமிழக அரசியல்வாதிகளும் சில தமிழக பத்திரிகைகளும் உடந்தை.
    டெல்லி மற்றும் மும்பையிலும் பல குண்டு வெடிப்புகளை நடத்தி பல உயர்களை பலி வாங்கி, இன்னும் நாசவேலைகளில் ஈடுபடும் தீவிரவாத இயக்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முற்படும் இந்திய அரசியல்வாதிகள் ஈழ விடுதலை போராட்டத்தை தீவிரவாதம் என்று கொடி பிடிக்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  4. சாந்தி - நிச்சயம் சந்தோஷமான காலம் மீண்டும் வரும்.
    "எங்கள் தலைவன் எங்களுக்குக் காலம் தந்த கொடை அந்தப்பெருஞ்சூரியனை வஞ்சம் கொண்டு போய்விட்டது".. சோகத்திலும், இந்த வரிகளின் அழகு என்னைக்கொள்ளை கொண்டு விட்டது.

    சிவா - என்ன இருந்தாலும் பிரபாகரன் இறந்ததற்கு தமிழ்நாட்டில் யாரும் துக்கம் அனுசரிக்காதது எனக்கு வருத்தமே. ஏதோவொன்று குறைகிறது.

    பொன்னுசாமி - வட இந்தியர்க்கு தமிழர்கள் அன்னியர்களே. எனக்கு அவ்வளவாக இந்தியன் என்ற பற்று கிடையாது. எத்தணையோ வட இந்தியர் என்னிடம் Chennai எங்கே இருக்கிறது என்று கேட்டு இருக்கிறார்கள். அவர்களை பொறுத்தவரை ஆந்திராவுக்கு கீழே எல்லாருமே மதறாசிகள் தான். நம் இனம் வேறு. அவர்கள் இனம் வேறு. உணவு, உடை, கடவுள் என்று எல்லாமே. ஆனால், தமிழ்நாட்டிலேயே பலபேர் ஈழத்துயர் உணரவில்லை என்பது தான் வேதனை.

    பதிலளிநீக்கு
  5. பெயரில்லா1:51 AM

    //Colombo போன்ற இலங்கை நகரங்களில் நேரடியாக மக்களை தாக்காதது,//

    Colombo போன்ற நகரங்களில் மட்டுமல்ல இலங்கையின் வேறு பகுதிகளில் கூட தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களை பிரபாகரன் கொலை செய்துள்ளார். அமிர்தலிங்கம் உட்பட தமிழ் தலைவர்கள் பலரை கொலை செய்துள்ளார். பயங்கரவாத நடவடிக்கையால் பல நாடுகள் விடுதலைப் புலிகளை தடை செய்தன. விகடன், நக்கீரன் போன்ற பத்திரிக்கைகள் வியாபாரத்துக்காக இவரை பற்றி ஒரு போலி விம்பத்தை தமிழ்நாட்டில் உருவாக்கின. ஆங்கில பத்திரிக்கைகளில் இவர் பற்றிய உண்மைகளை அறியலாம்.

    பதிலளிநீக்கு