சனி, ஜூன் 13, 2009

உன் பொய்யும் புரட்டும்...........

உன் பொய்யும் புரட்டும்
என்னிடம் எதை எதிர்பார்த்து?
என் உண்மை உன்னை
ஏன் அறைந்து விட்டது?
உன் புலம்பலும், பின் என்னிடமிருந்து
உன் விலகலும் உன்னை யாரோ
ஒரு முகம் தெரியாத அன்னியனாக்கிவிட்டது.
இப்போது உன்னிடம் நான்
வைத்திருக்கும் அன்பு முகம் தெரியாத
மனிதர்களிடம் நான் கொண்டிருக்கும்
அன்பு போன்றதே.

திங்கள், ஜூன் 08, 2009

வகைப்படுத்தாதவை

1. கடந்த வாரம் Guindy ரயில் நிலையத்தில் ஒரு கணவன் மனைவிக்கிடையே
நடந்த உரையாடல். மனைவி தண்டவாளத்தை கடந்து சாலையை அடைய நடக்க ஆரம்பிக்கிறார்.
கணவன்: ஏ.. அந்த பக்கம் போகாதே. தண்டவாளத்தை தாண்டும்போது கீழே விழுந்தா என்னாவது. அங்க வெளிச்சம் வேறு இல்ல!!!
மனைவி: ஏங்க! உங்களுக்கு வாயில நல்ல வார்த்தையே வராதா? படிக்கட்டு ஏறி போனா எப்ப போய் சேர்வது? அதெல்லாம் ஒண்ணும் ஆகாது. வாங்க இப்படியே போகலாம்.
சொல்லிவிட்டு, கணவனையும் இழுத்துக்கொண்டு கடைசியில் தண்டவாளத்தின் மேல் நடந்து தான் கடந்தார்கள் - சண்டை போட்டுக்கொண்டு...சில சமயம் பெண்கள் உணர்ச்சி வசப்படாமல், நல்லது கெட்டது எது என்று யோசித்தும் பார்க்கவேண்டும் என்று தோன்றுகிறது.
2. கடந்த வாரம் நிறைய தமிழ் படங்கள் பார்க்க நேர்ந்தது. யாவரும் நலம், அருந்ததி, பசங்க ஆகியவை தான் அவை. இதில் யாவரும் நலம் மற்றும் அருந்ததி இரண்டும் திகில் படங்கள். நன்றாகவே இருந்தன. யாவரும் நலத்தில் டைரக்டரையும், மாதவனையும், அருந்ததியில் டைரக்டரையும் பாரட்டியாக வேண்டும். ஆனாலும் பசங்க தான் என்னை மிகவும் கவர்ந்தது. அதில் நடித்தவர்கள் எல்லோருடைய நடிப்பும் யதார்தமோ யதார்தம். நீண்ட நாட்களுக்கு பிறகு மனதை தொட்ட கதை. டைரக்டர் பாண்டி ராஜ்க்கும், இசையமைத்த ஜேம்ஸ் வசந்தனுக்கும், அனைத்து நடிகர்களுக்கும் என் பாராட்டுக்கள். இத்தணை படங்களை பார்த்ததும் ஒரே ஒரு உறுத்தல் மட்டும்
நெஞ்சில். இனிமேல் நல்ல படங்களை தியேட்டரில் தான் போய் பார்க்க வேண்டும்.

செவ்வாய், ஜூன் 02, 2009

என்னைக் கவர்ந்த பாடல்கள்- கடந்த இரண்டு வருடங்களில்

தமிழ் சினிமா பாடல்கள் இப்போதெல்லாம் வித்தியாசமாக, வேகமான Beat-டோடு கேட்டவுடன் பிடித்துப்போகும் வகையில் இருக்கின்றன. யுவன் சங்கர் ராஜா, ஹாரிஸ் ஜெயராஜ், தேவி ஸ்ரீபிராசாத், ஏ.ஆர். ரஹ்மான் - இவர்கள் இசையில் படத்திற்கு ஒரு பாட்டாவது மனதைக் கவரும் வகையில் இருக்கும். கே.வி.மகாதேவன், எம்.ஸ். விஸ்வநாதன், இளையராஜா போன்ற இசை மாமேதைகளுக்கு பிறகு, இப்போதைய தலைமுறை இசையமைப்பாளர்களும் சிறப்பாக இசையமைப்பதை ஒத்துக்கொள்ள வேண்டும். சில ட்யூன்கள் மேற்கத்திய இசையிலிருந்து எடுக்கப்பட்டதாக இருந்தாலும் அதை தமிழ் படுத்தும் திறமையும் பாரட்டத்தக்கதே. இனி பாடல்களின் பட்டியல்.

1. ஏகன் - ஹே பேபி பேபி...
2. ஏகன் - கிச்சு கிச்சு....
3. ஐயன் - ஹனி.. ஹனி.. ஹனி..
4. ஐயன் - நெஞ்சே..நெஞ்சே..
5. ஐயன் - பளப்பளக்கிற...
6. கந்தசாமி - Excuse me.. Mr. கந்தசாமி..
7. கந்தசாமி - இந்தியா பொன்னு தாங்கோ..
8. குங்கும பூவும் கொஞ்சும்புறாவும் - கடலோரம்...
9. குளிர் 100 டிகிரி - மனசெல்லாம்....
10. நெஞ்சத்தைக் கிள்ளாதே - நெஞ்சத்தைக் கிள்ளாதே...
11. சக்கரக்கட்டி - Taxi.. Taxi....
12. சக்கரக்கட்டி - மருதானி...
13. சக்கரக்கட்டி - சின்னம்மா...
14. சண்ட - அக்டோபர் மாதத்தில்..
15. சந்தோஷ் சுப்பிரமன்யம் - எப்படி இருந்த எம்மனசை...
16. சரோஜா - தோஸ்து படா தோஸ்து....
17. சரோஜா - கோடானுக் கோடி...
18. சர்வம் - நீ தானே...
19. சத்யம் - என் அன்பே....
20. சிவா மனசுல சக்தி - ஒரு கல் ஒரு கண்ணாடி...
21. சிவாஜி - அதிரடிக்காரன்....
22. அழகிய தமிழ் மகன் - நீ மர்லின் மன்ரோ......
23. சிவாஜி - வாஜி வாஜி....
24. திருவிளையாடல் - கண்ணுக்குள் ஏதோ....
25. திருவிளையாடல் - விழிகளில்...
26. வாரணம் ஆயிரம் - அவ என்ன....
27. வில்லு - டாடி மம்மி....
28. வில்லு - தீம்தனக்க தில்லானா...
29. வில்லு - வாடா மாப்பிள்ளை..
30. யாவரும் நலம் - ஒ.. sexy.. mama..

MP3 download செய்துக் கேட்டுக்கொள்ளுங்கள். Very nice songs..and you can suggest
some more to the list.

புதன், மே 27, 2009

பிராபகரன் சுதந்திர போராட்டத் தியாகியா? தீவிரவாதியா?

இந்த தலைப்பு சமீப காலமாக என்னை குழப்பி வருகிறது. நான் பிரபாகரனைப் பற்றி அறிந்தது எல்லாம், தமிழ் பத்திரிக்கைகள் மூலமாகவும், தமிழ்நாட்டு அரசியல் வாதிகளின் மூலமாகவும் தான். அவை எல்லாமே எனக்கு அவர் மேல் ஒரு நல்ல அபிப்பிராயத்தையே உண்டு பண்ணியிருக்கிறது. மனதை தொட்டு சொல்வதென்றால், எனக்கு பிராபகரன் மேல் ஒரு Soft Corner உண்டு. இதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில், விடுதலைப்புலிகள் தமிழ்நாட்டு மக்களுக்கு எந்தவொரு இடையூறும் செய்யாமல் இருந்தது, இத்தனை தமிழ் வீரர்களை போராட்த்தில் பங்கேற்க செய்தது, Colombo போன்ற இலங்கை நகரங்களில் நேரடியாக மக்களை தாக்காதது, அவர்களின் தமிழ் மேல் உள்ள ஈடுபாடு, கட்டுப்பாடு போன்றவை.

ஆனால், இங்கு இந்தியாவில், Times now, NDTV போன்ற தொலைக்காட்சி ஊடகங்களில் பிராபகரனை தீவிரவாதியாகவே செய்தியிட்டு வருகிறார்கள்.
அவர் தீவிரவாதி என்று நம்பும் எவராது இருந்தால் தயவு செய்து அதற்கு ஆதாரமாக விளக்கங்கள் (உதாரணத்தோடு) அளிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். Let us clarify ourselves with the Data.

திங்கள், மே 25, 2009

சிறந்த குடும்பத் தலைவன்

பீகாரின் முதல்வர் நித்திஷ் குமார் காங்கிரஸ்க்கு பாராளுமன்றத்திற்கு ஆதரவு தர ஒரு நிபந்தனை விதித்தார். அது, பீகாருக்கு முக்கிய அந்தஸ்த்து அளிக்க வேண்டுமென்று!!! அதாவது, பீகாருக்கு பல நல்ல திட்டங்கள் கிடைக்க வேண்டுமென்று.

நம் முதல்வர் கருணாநிதி விதித்த நிபந்தனை - தன் குடும்பத்தார் அனேகருக்கு மந்திரி பதவி வேண்டுமென்பது. தான் சொத்து சேர்த்து, பிறகு தன் சந்ததியே தலைமுறைக்கு சொத்து சேர்த்து, பணக்காரர்களாய் வாழ வேண்டுமென்று நினைக்கும் அவர் சிறந்த குடும்பத்தலைவன் தானே. என்ன நான் சொல்வது? சரியா?

வெள்ளி, ஏப்ரல் 10, 2009

யாருக்கு ஓட்டு போட

இது தேர்தல் நேரம் என்பதால் ஒரு கேள்வி. இதுவரை நாம் தமிழ்நாட்டில்
தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆட்சியையும், மத்தியில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க ஆட்சியையும் பார்த்துக்கொண்டு வருகிறோம். இந்த இரண்டு கட்சிகளுக்குள் எது ஆட்சிக்கு வந்தாலும், எந்த எந்த மாற்றங்கள் வருகின்றன என்று யோசித்து பாருங்களேன்.

தமிழ்நாட்டை பொறுத்தவரை அ.தி.மு.க ஜெயித்தாலும், தி.மு.க ஜெயித்தாலும், நாட்டின் நிலமை ஒன்றுதான். சுகாதார தரமோ, அரசாங்க அலுவலகங்களின் செயல்பாடோ, லஞ்சமோ, ஊழலோ, பாதுகாப்போ, வேலைவாய்ப்புகளோ, வாழ்க்கைதரமோ எதிலாவது வேற்றுமை தெரிகிறதா? ஊடகங்களில் தான் தி.மு.கவும் அ.தி.க.வும் எதிரிகள். ஆனால், கொள்கை அளவில், அமைப்புகளில், செயல்பாடுகளில் கருணாநிதியும், ஜெயலலிதாவும் ஒரே மாதிரியானவர்கள். இரண்டு பேருமே தேவைப்பட்டால் ராமதாஸை சேர்த்துக்கொள்வார்கள். தேவைப்பட்டால் L.T.T.E ஐ ஆதரிப்பார்கள். தேவைப்பட்டால் காங்கிரஸுடன் கூட்டு வைத்துக்கொள்வார்கள்.

இப்படி இருக்கையில், நாம் மாற்றி மாற்றி தி.மு.க வுக்கும், அ.தி.மு.க வுக்கும் ஒட்டு போட்டு ஜெயிக்க வைக்கிறோம். இரண்டு கட்சியுமே ஒரே மாதிரி கட்சி தானே.

நம் ஓட்டுக்கு ஒரு அர்த்தம் இல்லாத போது நாம் என்ன செய்ய??