திங்கள், ஜூலை 07, 2008

காந்தி முதல் அப்துல் கலாம் வரை!!

இதை படிக்கும் உங்களிடம் ஒரு உறுதிமொழியை வேண்டுகிறேன். அது:
1. பொது இடங்களில் குப்பை போடாமல் இருப்பது.
2. பொது இடங்களில் துப்பாமல் இருப்பது.
3. பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தவிர்ப்பது.
4. பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தவிர்ப்பது.

சமீபத்தில், காந்தியடிகளின் "An Autobiography" படித்தேன். அவர் தென்னாப்பிரிக்க இந்திய மக்களுக்காகவும், பிறகு இந்திய மக்களுக்காகவும் எவ்வளவு உழைத்தார் என்பதை அறிந்துக்கொள்ள முடிந்தது. அடிமைத்தனத்திலிருந்தும், தீண்டாமையிலிருந்தும் சுதந்திரம் வாங்கிக்கொடுத்த அவர் நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதை பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சில இடங்களில், மூன்றாம் வகுப்பில் ரயில் பயணம் செய்யும் போது மட்டும் இந்தியர்கள் தூய்மை விஷயத்தில் காட்டும் அசிங்கங்களை எடுத்துரைக்கிறார்.

இன்று, நம் சமகாலத்தில் வாழ்ந்து வரும் அப்துல் கலாம் பெயரை உச்சரிக்காத பட்டிமன்றங்களோ, பேச்சுப்போட்டிகளோ உண்டா? ஆனால் அவரோ விண்வெளியிலும், அறிவியலிலும், இந்தியா வல்லரசு ஆவதிலும் மட்டுமே கவனம் கொண்டவராக இருக்கிறார். சுத்தமின்மை, சுகாதாரமின்மை போன்றவை இந்தியர்களின் அன்றாட வாழ்வில் கவனிக்க கூட முடியாமல் கலந்து போய்விட்டது. அப்துல் கலாம் போன்றவர்கள் மக்களிடமும், மாணவர்களிடமும் இதை கொண்டு போய் சேர்க்க வேண்டும். யோசித்து பார்த்தால் எந்த அரசியல் வாதியும், தலைவரோ, பள்ளியோ, அம்மா, அப்பாக்களோ இதை சொல்லிக்கொடுப்பதில்லை. எனவே, நமக்கு நாமே முதலில் சொன்ன உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

சுத்தம் முதலில் வரட்டும். வளர்ச்சி தானே வரும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக