திங்கள், ஆகஸ்ட் 25, 2008

Reel Rajini

நான் ஜூன் 16, 2006 இல் வெளியிட்ட பதிவின் மறுபதிவு - எத்தனை தடவை Clarify பண்ணினாலும், சில பேர் ரஜினியின் அரசியல் சார்ந்த சினிமா வசனங்களை வைத்துக்கொண்டு செய்யும் அறைகுறை விமர்சனங்கள் அவர்களுக்கு இருக்கும் குறைந்த அறிவை காட்டுகின்றது. Rajini Haters- please grow. Still time for you to learn and realize!!!

http://amudhansiva.blogspot.com/2006/06/reel.html

சனி, ஆகஸ்ட் 02, 2008

குசேலன் - விமர்சனம்

P. வாசுவுக்கு நான் கை கொடுக்க வேண்டும். எந்தளவுக்கு, இப்படத்தை கேவலமாக எடுத்திருப்பார் என்று நினைத்திருந்தேனோ, அதைவிட மகாகேவலமாக எடுத்திருக்கிறார். உதாரணத்துக்கு பசுபதியை பற்றி ஒரு பாட்டுங்க! படத்தில் அவர் சூப்பர்ஸ்டார் நண்பர் என்பதற்காக அவரை காக்காய் பிடிப்பதற்காக ஒரு பாட்டு. அதில் கூட இரண்டு அழகிகள் (??) அறைகுறை ஆடையோடு குத்தாட்டம் போடுகிறார்கள். மளையாள படத்தில் இதெல்லாம் இல்லை. அப்புறம் சோனா என்றொரு நடிகையும், வடிவேல் சம்பந்த காட்சிகளும், வடிவேலு நயந்தாராவை ஜொல்லு விடும் காட்சியும் வாசுவின் குணநலனை எடுத்துரைக்கிறது. மட்டமான ரசனை. எப்படி பாலசந்தர் இவருக்கு வாய்ப்பளிக்கிறார் என்று தெரியவில்லை. இப்படி இந்த அசிங்கங்களும், நாலைந்து பாட்டும் படத்தை இரண்டு மணிநேரம் நகர்த்திசெல்கிறது. மீதம் உள்ள சொச்ச நேரத்தில் கொஞ்சம் கதையும், சூப்பர்ஸ்டார் காட்சிகளும்.
இதில் மகா கொடுமை என்னவென்றால், ரஜினிக்கு styla.. ட்ரஸ் போட்டு அந்த படங்களையெல்லாம் வெளியே விட்டு பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிவிட்டார். படத்தில் பார்த்தால், அந்த காட்சிகளெல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் மறைந்து விடுகின்றன.
இனியும் P.வாசு remake படம் எடுத்தால், யாராவது பொதுஜன வழக்கு தொடர்ந்து அதை நிறுத்த வேண்டி, கடவுளை வேண்டிக்கொள்கிறேன்.
கடைசியாக, ரஜினி பாலச்சந்தருக்கு உதவ போய் இதில் மாட்டிக்கொண்டார். ஆனால், அதில் அவர் தன் பங்கை செய்திருக்கும் அழகு, as usual, excellent.
பின் குறிப்பு: ஜி.வி.பிரகாஷின் இசை - பாட்டுக்கள், B.G.M சுத்தமாய் எடுபட வில்லை. அரவிந்த் கிருஷ்னாவின் ஒளிப்பதிவு அருமை.
பசுபதியை கொஞ்சம் சரளமாக பேசவிட்டிருக்கலாம். Constipation கொண்டவரைப்போல் முகபாவம் படம் முழுதும். இப்பயொரு பசுபதி, சும்மா வந்து போகும் மீனா, ever irritating வையாபுரி, சந்தான பாரதி, வடிவேலு இவர்கள் முகங்களை பார்த்து எரிச்சல் அடையும் போது, திடீரென்று சூப்பர்ஸ்டார் வரும்போது என்ன ஒரு பெரிய வித்தியாசம், ஆறுதல். His great Charm & Personality take you to the edge of the seat. Excellent screen presence.
இப்படிக்கு....
இந்த படம் fail ஆக கடவுளை பிராத்திக்கும் ஒரு ரஜினி ரசிகன்.

வெள்ளி, ஆகஸ்ட் 01, 2008

தசாவதாரம்

கமலுக்கு தான் ஒரு சிறந்த நடிகர் என்று நிருபிக்க பத்து அவதாரம் தேவையில்லை. தன்னை அவர் அதிக அளவில் வெளிப்படுத்திக்க விரும்புவதே என்னை இந்த படத்தை இத்தணை நாளாய் பார்க்காமல் இருக்க செய்தது. சமீபத்தில் அப்படத்தை பார்த்ததில்...
Fletcher, பலராம் நாயுடு பாத்திரங்கள் கமலின் நடிப்பு திறமையை நிருபணம் செய்கிறது. ஜப்பானிய கமலின் make-up வியக்க வைக்கிறது. ராமனுஜ நம்பி கேரக்டரும், பாட்டி கேரக்டரும் பிடிக்கவில்லை.
மொத்ததில், I like Fletcher Character.
கமலிடம் தேவர் மகன் போன்ற படங்களை எதிர்பார்க்கிறேன். Circus படங்களை அல்ல. குட்டையாவது, நெட்டையாவது, பெண்ணாவது, கிழவியாவது, இப்போது foreigner ஆவது எல்லாம் பார்த்தாச்சு. இன்னும் கரடி, புலி, பூனையாக தான் பார்க்கவில்லை.

திங்கள், ஜூலை 07, 2008

காந்தி முதல் அப்துல் கலாம் வரை!!

இதை படிக்கும் உங்களிடம் ஒரு உறுதிமொழியை வேண்டுகிறேன். அது:
1. பொது இடங்களில் குப்பை போடாமல் இருப்பது.
2. பொது இடங்களில் துப்பாமல் இருப்பது.
3. பொது இடங்களில் சிறுநீர் கழிப்பதை தவிர்ப்பது.
4. பொது இடங்களில் புகைப்பிடிப்பதை தவிர்ப்பது.

சமீபத்தில், காந்தியடிகளின் "An Autobiography" படித்தேன். அவர் தென்னாப்பிரிக்க இந்திய மக்களுக்காகவும், பிறகு இந்திய மக்களுக்காகவும் எவ்வளவு உழைத்தார் என்பதை அறிந்துக்கொள்ள முடிந்தது. அடிமைத்தனத்திலிருந்தும், தீண்டாமையிலிருந்தும் சுதந்திரம் வாங்கிக்கொடுத்த அவர் நம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்வதை பற்றி பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. சில இடங்களில், மூன்றாம் வகுப்பில் ரயில் பயணம் செய்யும் போது மட்டும் இந்தியர்கள் தூய்மை விஷயத்தில் காட்டும் அசிங்கங்களை எடுத்துரைக்கிறார்.

இன்று, நம் சமகாலத்தில் வாழ்ந்து வரும் அப்துல் கலாம் பெயரை உச்சரிக்காத பட்டிமன்றங்களோ, பேச்சுப்போட்டிகளோ உண்டா? ஆனால் அவரோ விண்வெளியிலும், அறிவியலிலும், இந்தியா வல்லரசு ஆவதிலும் மட்டுமே கவனம் கொண்டவராக இருக்கிறார். சுத்தமின்மை, சுகாதாரமின்மை போன்றவை இந்தியர்களின் அன்றாட வாழ்வில் கவனிக்க கூட முடியாமல் கலந்து போய்விட்டது. அப்துல் கலாம் போன்றவர்கள் மக்களிடமும், மாணவர்களிடமும் இதை கொண்டு போய் சேர்க்க வேண்டும். யோசித்து பார்த்தால் எந்த அரசியல் வாதியும், தலைவரோ, பள்ளியோ, அம்மா, அப்பாக்களோ இதை சொல்லிக்கொடுப்பதில்லை. எனவே, நமக்கு நாமே முதலில் சொன்ன உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

சுத்தம் முதலில் வரட்டும். வளர்ச்சி தானே வரும்.