புதன், அக்டோபர் 11, 2017

கொசுக்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ள ....

டெங்கு  காய்ச்சலால் இப்போது ஏற்பட்டு வரும் உயிரழப்பு 100 - ஐ தொட்டுள்ளது என்கிறார்கள்.  இதை யாரும் நிச்சயம் அலட்சியமாக எடுத்து கொள்ள முடியாது.   ஆனால் இதை கவனம் கொண்டு சரி படுத்த வேண்டியவர்கள் அலட்சியமாக எடுத்துக் கொண்டனரோ என்ற ஐயம் வராமலில்லை..  டெங்கு கொசு என்றால் என்ன வென்று எல்லாம் விவரிக்க தேவையில்லை.  நேராக விஷயத்துக்கு போவோம்... டெங்கு கொசுவினால் தான் இது பரவுகிறது எனில் கீழே சொல்லப் பட்டிருக்கும் யோசனைகளை பின்பற்றுங்கள்...

Image result for mosquito net on windows
-  வீட்டிலுள்ள அனைத்து ஜன்னல்களுக்கும் வலை போடுங்கள்..  கதவுகளை எப்போதும் மூடியே வைத்திருங்கள்.

-   Corporation காரர்கள் கொசு மருந்து அடிக்கும் போது, உங்களுக்கு சந்தேகம் இருக்கும் இடத்திலும் அடிக்க சொல்லுங்கள்.

Image result for amazon mosquito net bed

-  உங்கள் படுக்கை (bed) அளவுக்கு  ஏற்ப கொசு வலை amazon.com இல் கிடைக்கிறது.  இப்போதே ஆர்டர் செய்து வாங்குங்கள்..

-  Mosquito Bat- ஆல் கொசுவை அடிக்கும் போது  ஜன்னல் திரைகள், தொங்கி கொண்டிருக்கும் துணிகள், நாற்காலி, கட்டிலுக்கு பின்னே என்று இடுக்களில் உட்கார்ந்திருக்கும் கொசுக்களை கலைத்து விட்டு அடியுங்கள்.

- அதிக ஜுரத்துடன், தலைவலியும், கண்களை அசைக்கும் பொது வலியும் இருந்தால் உடனேயே டாக்டரை போய் பாருங்கள். 

மற்றபடி கொசுவிரட்டி மருந்துகள் உபயோகிப்பது, ஓடோமொஸ் தடவிக் கொள்வது போன்றவை எல்லோரும் அறிந்ததே....

நான்  சிறு பையனாக இருந்த சமயத்தில் (90 களில்) வீட்டில் ரோபோ படத்தில் வரும் பந்து போல ஒரு கொசு பந்து (கொசு பண்ணை??) ஆங்காங்கே தெரியும்.  நாங்கள், வீட்டில்லுள்ளவர்கள் அதை ஒரு வலையிலோ, துணியுலோ பிடித்து அடித்து விடுவோம்.  வீட்டின் வெளியே சாலையில் நின்று பேசிக்கொண்டிருக்கும் போது தலைக்கு மேலே ஒரு கொசு வட்டம் தெரியும்.  கொசுவை கையால் பிடித்து தூக்கி போடும் வரை அது மேலே உட்கார்ந்து ரத்தத்தை உறிந்து கொண்டிருக்கும். இதை பற்றியெல்லாம் அப்போது கவலை பட்டதே இல்லை.  அப்போதைய நல்ல காலம் டெங்கு என்றால் என்ன என்றே அப்போது தெரியாது.  இப்போது நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது.  நல்ல தான்யா கிளப்புறீங்க ...டெங்கு ..சிக்கன் குன்யா என்று தான் கேட்க தோன்றுகிறது...  உண்மையிலேயே டெங்கு கொசுவால் தான் வருகிறதோ இல்லையோ மேலே சொன்ன யோசனைகளை பின்பற்றுங்கள்.... டெங்கு சீசன் முடிந்தவுடன் வேறு ஒன்றை கிளப்பி விடுவார்கள்.. அப்போது வேறு யோசனைகள் ...



ஞாயிறு, அக்டோபர் 08, 2017

வோலோகாப்டர் - The Air Taxi



Image result for volocopter



இனிமேல் மனிதர்கள் வானத்தில் தும்பிகள் மாதிரி பறக்க போகிறார்கள்.  ஆம்.  இப்போது ஹெலிகாப்டர் போல வோலோகாப்டர் என்று ஒரு வானூர்தி வந்து விட்டது.  அலுவலகம் செல்வது, மார்க்கெட் செல்வது, சிட்டிக்குள் ரவுண்டு அடிப்பது.. எல்லாமே இனிமேல் வோலோகாப்டரில் தான்.

போனவாரம் தான் மனைவியுடன் கடைக்கு செல்கையில் பேசிக் கொண்டிருந்தேன்.  இன்னும் பத்து இருபது வருடங்களில் மக்கள் ஆபீஸ் போவதற்கு வானத்திலேயே சிறிய பறக்கும் டாக்சியில் போய்விட்டு வருவார்கள் என்று... பெரிய ஆருடம் எல்லாம் இல்லை.  ரொம்ப நாட்களுக்கு முன்பே எங்கோ இந்த  விஷயத்தை பற்றி படித்து இருந்தேன்.  இன்று டிவியில் துபாயில் இந்த வானூர்தியை அறிமுகப் படுத்த போகிறார்கள் என்று செய்தியை பார்த்ததும் ஏன் மனைவிக்கு ஆச்சர்யம்.  நீங்க போன வாரம் தாங்க சொன்னீங்க ... இப்ப பாருங்க அதே மாதிரி வந்து விட்டது என்று... ஆம் ஐயாவுக்கு நிகழ்காலம் , வருங்காலம் எல்லாம் தெரியும் என்று கொஞ்சம் தம்பட்டம் அடித்துக்  கொண்டாலும்,  இந்த கண்டுபிடிப்பு அடுத்து எதில் போய் முடியும் என்று யோசனை வந்து விட்டது.


வானத்தில் டிராபிக் சிக்னல் வைக்க முடியாது.  நம்ம ஆட்கள் தங்கள் இஷ்டத்துக்கு ஒட்டி பழக்க பட்டவர்கள்.  இவர்களை ஒழுங்காக ஒருத்தர் மீது ஒருத்தர் இடிக்காமல் ஓட்ட என்ன செய்வார்கள்.  அதற்கும் வழி இருக்கும் போலிருக்கிறது.  GPS (Global positioning system) பயன்படுத்தி இப்போது Aeroplane பறப்பது மாதிரி விபத்துக்கள் இல்லாமல் பயன்படுத்தலாம் என்று சொல்கிறார்கள்.  இந்த வோலோகாப்டர்களை வோலாகாப்டர் என்னும் ஜெர்மன் நிறுவனமும், Airbus, Uber போன்ற நிறுவனங்களும் தயாரிக்க இருக்கின்றது.  இப்போது இதை துபாயில் மாதிரி ஓட்டம் செய்து பார்த்து இருக்கிறார்கள்.  இன்னும் சில மாதங்களில் பயன் பாட்டுக்கு வந்து விடும்.






நமக்கு உணவு இல்லாவிட்டாலும் தங்க இடம் இல்லாவிட்டாலும், நல்ல சாலைகள் இல்லாவிட்டாலும் செல் போன் வேண்டும், bullet train போன்றவை வேண்டும் ஆயிற்றே ... எனவே கூடிய விரைவில் இந்த வோலோகாப்டர் இந்தியாவுக்கு வந்து விடும் என்று நம்பலாம்.   சைக்கிள், பைக் வாங்கி கொடுத்தது போய், வருங்காலத்தில் அப்பாக்கள், பெண் வீட்டார்கள்  வோலோகாப்டர்கள் வாங்கி கொடுப்பார்கள்.  இந்த விஷயத்தில் எனக்கு ஒரு ஆசை இருக்கிறது.  மனிதனின் இந்த கண்டுபிடிப்புகள் நன்றாக தான் இருக்கிறது.  கூடவே, நம் மக்கள் தொகையை குறைக்க ஏதாவது செய்தால் தேவலை ... இல்லையென்றால் இந்த கண்டுபிடிப்புகள் கோடிக்கணக்காக இருக்கும் நம் மக்கள் ஒழுங்காக பயன்படுத்த முடியாமல் போக வாய்ப்பிருக்கிறது.

செவ்வாய், அக்டோபர் 03, 2017

மக்களும் இன்றைய அரசியலும் ...

மக்கள் ரொம்பவே மாறி விட்டார்கள் என்றும், இன்றைய அரசியலில் நடிகர்களுக்கு மக்களின் ஆதரவு கிடையாது என்றும் கேள்வி படுகிறோம். உதாரணம், ஜல்லிக்கட்டு, நெடுவாசல் போராட்டங்களில் நடிகர்களின் பங்களிப்பு இல்லவே இல்லை என்று கண்டோம். அஜித், விஜய் என்று தீவிரமான ரசிகர்கள் இருந்தாலும் அன்றாட  பிரச்சனைகளுக்கு நடிகர்களை எதிர்நோக்கி மக்கள்  இல்லை என்று சொல்கிறார்கள்.  இங்கு  தான் ஒரு முரண்பாடு தெரிகிறது.  

Image result for தமிழ் நாட்டு மக்கள் அரசியல்Image result for அரசியலில் சினிமாக்காரர்கள்

நடிகர்களுக்கு அரசியலில் ஆதரவு கிடையாது... சரி...  இப்போது இருக்கும் அரசியல்வாதிகளும் ஒருவர் பாக்கி இல்லாமல் யாரும் சுத்தமானவர் கிடையாது.  அப்படியானால் யாரை தான் மக்கள் ஆதரிப்பார்கள்.  புதிதாய் ஒருவர் முளைப்பார் என்று காத்திருப்பார்களா ?  சகாயம் போன்றவர்கள் அஞ்சுவதிலும் நியாயம் இருக்கிறது.  யோசித்து பாருங்கள் . தினம் இரண்டு மிரட்டல் போன் கால் வந்தால் எப்படி இருக்கும்.. அப்படி என்றால் மக்கள் விரும்பும் படித்த நேர்மையான மனிதர் யார் அரசியலுக்கு வரக்கூடும்??

எனக்கு தெரிந்த ஒருவர் இருக்கிறார்.  பள்ளியில் ஒழுங்காக படிக்காமல் படிப்பை பாதியில் கை விட்டார். பிறகு சொந்தமாக கடை வைக்கிறேன் என்று அதையும் சரியாக செய்யாமல் விட்டு விட்டார்.  அடுத்தது என்ன ? இருக்கவே இருக்கிறது வீடு வாடகை புரோக்கர் தொழில், ரியல் எஸ்டேட் தொழில், சீட்டு நடத்தும் தொழில்.. இதையெல்லாம் செய்கிறார்.  ஆனால் இவர்கள் இதை செய்யும் போதே அரசியலில் யாராவது இழுத்து விடுகிறார்கள்.  அவர் விஜயகாந்த் கட்சியில் சேர்ந்தார்.  விஜயகாந்த் எல்லாம் அவருக்கு பிடித்தமான நடிகர் இல்லை. ஆனாலும், கட்சியில் இருந்தால் ஒரு சப்போர்ட் என்பார்.  அங்கு அவருக்கு சரியான கவனிப்பும், வருமானமும் இல்லாததால், அதை விட்டு விட்டு இன்னொரு கட்சியில் சேர்ந்து விட்டார்.  இப்படி தான் பெரும்பாலும் வீணாய் போன இளைஞர்கள் அரசியலில் ஈடு படுகிறார்கள்.  இவர்களை கொண்டது தான் இன்றைய கட்சிகள்.  அப்படியானால் நல்ல மனிதர்கள் யார் தான் அரசியலுக்கு வருவார்கள்? வந்தால் விட்டு விடுவார்களா ?

IT கம்பனிகளில் வேலை செய்பவர்களும், அரசாங்க உத்தியோகத்தில் உள்ளவர்களும், டாக்டர்களும் , வழக்கறீங்கர்களும, engineergalum, ஆசிரியர்களும், தொழிலதிர்பகளும், விளையாட்டு வீரர்களும்  மற்றும் பல கலைஞர்களும் (பாடகர், இசையமைப்பாளர், நடனமாடுவோர்)  யாரவது அரசியலுக்கு வர யோசிப்பார்களா ?? எத்தனை பேர் இவர்களில் இது வரைக்கும் வந்து இருக்கிறார்கள்.  வர மாட்டார்கள்.  ஏனென்றால் இவர்களுக்கு பின்னால் மக்கள் சப்போர்ட் இல்லை.  இவர்களை அரசியல் வாதிகள் சுலபமாக மிரட்டியே ஓட வைத்து விடுவார்கள்.  ஒரு சமயம் ஒரு பத்திரிக்கை ஓட்டெடுப்பு நடத்தியது.  தமிழ் நாட்டில் சிறந்த பத்து விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள் என்று நீண்டது பட்டியல்.  உண்மையிலேயே பத்து பேர் எழுதுவது மிக கடினமாக இருந்தது.  இதை ஏன் சொல்கிறேன் என்றால், சினிமா காரர்களை விட மற்ற துறைகளில் பிரபலமானவர்கள் மிக மிக குறைவு.  சினிமா காரர்கள் பின்னாடி தான் மக்கள் கூட்டம் இருக்கிறது.  மக்கள் சப்போர்ட் இருந்தால் தான் அரசியல் வாதிகள் பயப்படுவார்கள். அதனால் தான் சினிமா காரர்கள் தைரியமாக அரசியலுக்கு வருகிறார்கள்.

எனவே, சினிமாக்காரன் வேண்டாம் என்று சொல்லும் மக்களே, மற்ற துறையில் யாருக்கு பின்னால் அணிவகுப்பீர்கள் என்று சொல்லுங்கள்... ஒருவரும் வரமாட்டார்கள் ... வந்தாலும் இன்றைய அரசியல் சிஸ்டத்தில் அவர்களை தாக்கு பிடிக்க விட மாட்டார்கள்...இப்போதைக்கு நம் தலை எழுத்து சினிமாக்கார்களுடன் தான்.  ரஜினியோ கமலோ நல்ல அரசியல் வாதியாக இருந்தால் ரொம்ப நல்லது...  அது எப்படியோ, தமிழ் நாட்டில் இப்படி தான் என்று இந்த நிலைமை வந்து விட்டது.  மற்ற துறையில் உள்ளவர்களுக்கு பின்னால் மக்கள் அணிதிரளும் வரை சினிமா காரர்களை ஆதரிப்போம்...