Make in India - இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள் !!!
நம் பிரதமர், இந்தியா மேம்படைய கையில் எடுத்திருக்கும் ஆயுதம். ஊடகங்கள் வாயிலாக இதற்கு மக்கள் கொண்டிருக்கும் வரவேற்பு அதிகம். மோடியும் ஊர் ஊராய் சுற்றி திரிந்து எங்க ஊருக்கு வாங்கோ கடைய போடுங்கோ என்று கூவிக் கொண்டிருக்கிறார் . இதனால் வேலை வாய்ப்பு பெருகும் , பண புழுக்கம் அதிகரிக்கும் , கட்டு மான தொழில் மற்றும் பிற தொழில்கள் வளரும் என்பதெல்லாம் உண்மை தான். ஆனால் இந்தியாவின் அறிவு வளர்ச்சி ?? உலக சந்தையில் அறிவுக்கே முதலிடம். தொழில்நுட்பம் வளர்ந்தால் தான் நாம் உலக சந்தையில் ஆதிக்கம் செலுத்த முடியும். இந்தியா தயாரிக்கும் பொருட்களுக்கு உலக சந்தையில் நல்ல தேவை ஏற்பட வேண்டும் . இப்போது இஸ்ரோ பிற நாட்டு செயற்கை கோள்களை நம்முடைய ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவது போல ... இதற்கு என்ன செய்ய வேண்டும்? முதலில் கல்வி தரத்தை மேம்படுத்த வேண்டும். தொழில் சம்பந்தமான கல்வி சிறு வயதில் இருந்தே கொடுக்க வேண்டும். ஆராய்ச்சிக்கும் பொருள் தரத்தை உயர்த்துவதற்கும் அதிக பணம் செலவு செய்ய வேண்டும். இதையெல்லாம் இப்போது சீனா செய்துக்கொண்டிருகிறது. நாம் இன்னும் ஆங்கிலேயர் காலம் தொட்டு அந்நிய நாட்டினரை நம்பிகொண்டிருக்கிறோம் .
நம் மக்களின் நிலைமையும் ரொம்ப மோசம் தான். நல்ல சோறு பார்த்து பல நாளாச்சுன்னு பசியில வாடுறவன் போல மக்கள் ஒரு நல்ல தலைவனை பார்த்து வெகு நாளாகிவிட்டது. ஒரு நல்ல அரசாட்சிக்கும் அரசியல் வாதிக்கும் மக்கள் ஏங்கி கிடக்கிறார்கள். முன்னர் அரவிந்த் கேஜ்ரவால் அரசியல் பிரவேசம் செய்த போது அவருக்கு கிடைத்த வரவேற்பு இருக்கிறதே ... தமிழ் நாட்டில் கூட ஒரு கூட்டம் தலையில் குல்லா போட்டு லஞ்சம் ஊழல் என்று பொங்கி எழுந்தார்கள். இப்பொது மோடி . மனிதர் கொசு அடிப்பதற்குள் ஒரு பஞ்ச் டயலாக் பேசி விடுகிறார். மிக சிறந்த பேச்சாளர். ஒத்துக்கொள்ள தான் வேண்டும். Make in India - பெரிய பஞ்ச் டயலாக்... அவருக்கே தெரியாமல் கூட துறை சார்ந்தவர்கள் அவரை நம்ப வைத்திருக்கலாம். அரசாங்கம் கொஞ்சம் யோசித்து பார்ப்பது நல்லது.
இந்தியாவில் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள். Chicken poultry farm போல அந்நிய நாடுகள் இந்திய மக்களை நினைக்கிறார்கள் போலிருக்கிறது. அவர்களுக்கு நாம் கோழிகள் போலாகிவிட்டோம். அப்படியானால் நாம் என்ன செய்ய வேண்டும்?
ஒரு எடுத்துகாட்டு. பெரும்பாலும் Solar panel-கள் 20% வரை மட்டுமே திறன் வாய்ந்தவையாக இருக்கின்றன. இப்போது 44% வரை பிறநாட்டில் திறனை அதிகரித்து காட்டி இருக்கிறார்கள். நம் நாட்டில் உள்ள IIT போன்ற தொழில் கல்லூரிகள் மூலம் சிறந்த மாணவர்களைக் கொண்டு இதை 50 -60 % கொண்டு செல்லலாம். நம் ஊரில் அடிக்கிற வெயிலுக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும்.
இது வெறும் ஒரு உதாரணம். இதை போல விவசாயத்திலும் நிறைய முன்னேற்றம் காணலாம். உணவு விஷயத்தில் மட்டும் (சாப்பிடறதுல தாங்க!!!) நாம் எங்கோ போய் விட்டோம். சிக்கன் டிக்கா , பிரியாணி, இட்லி, தொசையென்று எத்தனை வகைகள். இதையெல்லாம் எழுதும் போதே பிரியாணி ஞாபகம் வந்து விட்டது. ஸ்டார் பிரியாணி ஒரு கட்டு கட்ட போகிறேன். Bye...